நாடோடிகள் கோபால்
இந்திய குணச்சித்திர நடிகர்
நாடோடிகள் கோபால் (Naadodigal Gopal) ஓர் குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றினார்.
நாடோடிகள் கோபால் | |
---|---|
பிறப்பு | கே. கே. பி. கோபாலகிருஷ்ணன் |
இறப்பு | 5 பெப்ரவரி 2020 | (அகவை 54)
மற்ற பெயர்கள் | கோபாலகிருஷ்ணன் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2009 – 2020 |
பிள்ளைகள் | 2 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் ஈரோட்டில் பணிபுரியும் பள்ளி ஆசிரியரான கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் (இரட்டையர்கள்) உள்ளனர்.
தொழில்
தொகுஒரு விவசாயியான கோபால் நாடோடிகள் (2009) என்ற படத்தில் அனன்யாவின் தந்தையாக அறிமுகமானார்.[1][2] பின்னர் ராஜா மந்திரி (2016) கலையரசன், காளி வெங்கட் ஆகியோரின் தந்தையாக நடித்தார். நம்ம வீட்டு பிள்ளை (2019) படத்தில் சிவகார்த்திகேயனின் சாராய மாமாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.[3] அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 (2020) இவருடைய கடைசி படமாக இருந்தது.[1][2]
இறப்பு
தொகுகோபால் 5 பிப்ரவரி 2020 அன்று மாரடைப்பால் தனது 54 வயதில் இறந்தார்.[1][2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Naadodigal actor Gopalakrishnan passes away". The Times of India. 5 March 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/naadodigal-actor-gopalakrishnan-passes-away/articleshow/73959180.cms. பார்த்த நாள்: 26 July 2020.
- ↑ 2.0 2.1 2.2 "பிரபல நடிகர் மரணம்! திரைத்துறையினர் அதிர்ச்சி! [Death of a famous actor! Shocking!]". Nakkheeran.
- ↑ Suganth, M (16 January 2017). "Raja Mandhiri will be like Aan Paavam: Kaali Venkat". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Raja-Mandhiri-will-be-like-Aan-Paavam-Kaali-Venkat/articleshow/51267539.cms. பார்த்த நாள்: 26 July 2020.