குணச்சித்திர நடிகர்

குணச்சித்திர நடிகர் (character actor) என்பது வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான அல்லது விசித்திரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு துணை நடிகரை குறிக்கும்.[1][2] இவர்கள் ஒரு திரைப்படத்தில் தனித்துவமான மற்றும் முக்கியமான துணை வேடத்தில் நடிப்பார்கள். முதன்மைக் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் இவர்களுக்கு கதைக்களத்தில் முக்கியத்துவம் சற்று குறைவாகவே கொடுக்கப்படும்.

ஆரம்பத்தில் கதாநாயகர்களாவோ அல்லது கதாநாயகிகளாவோ நடித்த நடிகர்கள் பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான சிறந்த வேடத்தை தேர்வு செய்து நடிப்பதால் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள்.[சான்று தேவை]

மேற்கோள்களை

தொகு
  1. character actor பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Retrieved 7 August 2014, "...An actor who specializes in playing eccentric or unusual people rather than leading roles...."
  2. Character actor, Retrieved 7 August 2014, "...an actor who plays unusual, strange, or interesting characters instead of being one of the main characters..."
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணச்சித்திர_நடிகர்&oldid=3935614" இலிருந்து மீள்விக்கப்பட்டது