மருதமலை (திரைப்படம்)

மருதமலை 2007-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சுராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் முக்கியk கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்திருந்தார். பா. விஜய் மற்றும் தபு சங்கர் பாடல்களை எழுதினர்.[1]

மருதமலை
இயக்கம்சுராஜ்
தயாரிப்புவேணு ரவிச்சந்திரன்
கதைசுராஜ்
இசைடி. இமான்
நடிப்புஅர்ஜுன்
வடிவேலு
மீரா சோப்ரா
லால்
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
எஸ். வைத்தி
படத்தொகுப்புமனோஜ்
கலையகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடு7 செப்டம்பர் 2007 (2007-09-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

மருதமலை, ஒரு காவல் அதிகாரியைப் பற்றிய திரைப்படமாகும். மருதமலை (அர்ஜுன்) காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நச்சியாபுரம் கிராமத்தில் வேலைக்கு செல்கிறார் அங்கே அவர் மூத்த அதிகாரி "என்கவுண்டர்" ஏகாம்பரம் (வடிவேலு (நடிகர்) என்பவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார். அவர், தனக்காக எல்லா விதமான வேலைகளையும் செய்யச் சொல்கிறார். ஒரு நாள் ஏகாம்பரத்தின் கருணையினால் நீதிமன்ற காவலிலுள்ள ஒரு குற்றவாளி தப்பித்து விடுகிறார். இதற்காக தண்டிக்கப்பட்ட மருதமலை அவரது உயர் அலுவலரின் வீட்டை சுத்தம் செய்ய் பணிக்கப்படுகிறார். அங்கு திவ்யா (மீரா சோப்ரா) மீது காதலில் விழுகிறார். பின்னர், சந்தையில், ஏகம்பரம் ஒரு பிச்சைக்காரனால் அவமானப்படுத்தப்படுகிறார். பிறகு மாசி(லால்) என்பவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் ஒரு நபரை கொலை செய்வதை மருதமலை பார்க்கிறார். பின்னர் தேர்தல் ஆணையர் அந்த இடத்திற்கு வருகிறார், மாசியின் எதிர்ப்பு காரணமாகவே கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறுவதில்லை என்று அவர் கண்டுபிடிக்கிறார்.

எனவே தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறார். பின்னர், தேர்தல் நாளன்று, பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், மாசியின் ஆட்கள், வாக்களிக்கும் மக்களை வெளியேற்றுவதோடு தேர்தல் ஆணையரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். மருதமலையின் தந்தை (நாசர்) மாசி மீது புகார் அளிக்கிறார். அந்த நேரத்தில், மருதமலை அங்கு வந்து, மாசியை கைது செய்கிறார். மாசியின் ஆட்கள் அவரை விடுதலை செய்ய மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. மருதமலை துணிச்சலுக்காக பதவி உயர்வு பெறுகிறார். பின்னர் மாசியினை எதிர்த்து எவ்வாறு தேர்தல் நடைபெறுகிறது எனபது மீதிக் கதை.

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதமலை_(திரைப்படம்)&oldid=3709974" இருந்து மீள்விக்கப்பட்டது