சூப்பர் சிங்கர் ஜூனியர்
சூப்பர் சிங்கர் ஜூனியர் - தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்பது 2007 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சிக்கு பாரதி ஏர்டெல் நிதியுதவி செய்தது. இது 2006 இல் ஒளிபரப்பான எயார்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கான பாடும் திறமையை கண்டறியும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் | |
---|---|
வகை | உண்மைநிலை பாட்டு போட்டி நிகழ்ச்சி |
வழங்கல் | சின்மயி (2007-2008) திவ்யா (2009) பூர்ணிதா ரம்யா சுப்பிரமணியன் பாவனா பாலகிருஷ்ணன் மா கா பா ஆனந்த் (2014-) பிரியங்கா (2014-) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 7 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 55–60 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 2007 ஒளிபரப்பில் | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்தியாவின் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதிலுமிருந்து பல குழந்தைகளை ஈர்த்தது. மேலும் போட்டிக்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடுமையான பல-நிலை தேர்வு நடைமுறைகள் செய்யப்பட்டது. அதில் சிறந்த பாடகர்களை தேர்தெடுத்து அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் சிங்கர் பட்டம் கொடுக்கப்பட்டது.
பருவங்கள்
தொகுபருவம் 1
தொகுஇந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 2007 இல் ஒளிபரப்பானது. இதனை பிரபல பாடகி சின்மயி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்காக பதிவு செய்த பல குழந்தைகளில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இது பலவிதமான சுவாரஸ்யமான பல சுற்றுகளைக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக கே. எஸ். சித்ரா மற்றும் உஷா உதூப் ஆகியோர் செயல்பட்டனர். விக்னேசுடன் போடட்டி போட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு கடினமான இறுதிப் ட்டிக்குப் பிறகு வெற்றியாளராக உருவெடுத்தார். நாட்டுப்புற இசையில் நன்கு பாடினார். மற்ற இறுதிப் போட்டியாளர்களான சாய்சரண் மற்றும் அபர்ணா (வைல்ட் கார்டு சுற்றில் "மதுமிதா ஷங்கருக்கு" எதிராக வென்றவர்) மிகவும் கடினமான போட்டியைக் கொடுத்தனர்.
நிகழ்ச்சியின் முடிவுக்குப் பிறகு, நிகழ்ச்சியின் முந்தைய பதிப்பின் 3 மற்றும் 4 ஆம் பருவங்களில் இறுதி வீரர் சாய்சரண் மற்றும் அரையிறுதி வீரர் மதுமிதா சங்கர் ஆகியோர் போட்டியிட்டனர். சாய்சரண் பின்னர் ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 பருவத்தின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். மேலும் காட்பாதர், மனம் கொத்திப் பறவை மற்றும் சாட்டை ஆகிய படங்களில் பாட இசை இயக்குநர்கள் ஏ. ஆர். ரகுமான் மற்றும் டி. இமான் ஆகியோர் வாய்ப்பளித்தனர்.
பருவம் 2
தொகுஇந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் 21 ஜூன் 2009 முதல் 17 ஜூன் 2010 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது.[2][3] இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்த 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இசைத் துறையில் பாராட்டப்படுவதற்கும் அங்கீகாரம் பெறுவதையும் தவிர, நிகழ்ச்சியின் முடிவில் அதன் வெற்றியாளருக்கு ரூ .25 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று உறுதியளித்தது. பின்னர், முதல் 25 செயல்திறன் சுற்றுகளின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புரவலர்கள் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெறும் வெற்றியாளருக்கு ரூ .25 லட்சம் மதிப்புள்ள அனுக்ரஹா சேட்டிலைட் டவுனில் ஒரு வில்லாவை வழங்குவதாக அறிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொடரின் தொகுப்பிலிருந்து விலகுவதாக பின்னணி பாடகர் சின்மயி எடுத்த முடிவைத் தொடர்ந்து,[4][5] பல்வேறு தொலைக்காட்சி தொகுப்பாளர்களான திவ்யதர்சினி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்ய பிரபாகர், மற்றும் உமா பத்மநாபன் ஆகியோர் பல்வேறு இடைவெளிகளில் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். பின்னணி பாடகி திவ்யா மிகவும் தவறாமல் தோன்றினார். குரல் பயிற்சியாளராக ஆனந்த் வைத்தியநாதன் இருந்தார். பின்னணி பாடகர் கே. எஸ். சித்ரா நிகழ்ச்சியின் நிரந்தர நடுவரானார். உஷா உதூப் நிகழ்ச்சியிலிருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக பின்னணி பாடகர்கள் மனோ, மற்றும் மால்குடி சுபா ஆகியோரும் நிரந்தர நடுவர்களாக இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.
பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ம. சு. விசுவநாதன், எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி, ஜென்சி, மாணிக்க விநாயகம், உண்ணிமேனன், சாதனா சர்கம், நித்யஸ்ரீ மகாதேவன், சுசித்ரா, ஹரிஷ் ராகவேந்திரா, மது பாலகிருஷ்ணன், சௌம்யா, அனுபமா, ஹரிசரண், புஷ்பவனம் குப்புசாமி, வீரமணி ராஜு, சாருலதா மணி, சுனிதா சாரதி, ரம்யா என்.எஸ்.கே., ஸ்ரீமதுமிதா, ஷாலினி, வினையா, திப்பு, மஹதி (பாடகி), மற்றும் பிரசாந்தினி உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசை இயக்குநர்கள் வலரும் நடுவர்களாக இந்த பருவத்தில் தோன்றினர். இத பட்டியலில் முந்தைய பதிப்பில் பங்கேற்பாளாராகவும், நடுவர்களாகவும் இருந்த நரேஷ் ஐயர், அனிதா கார்த்திகேயன், நிகில் மேத்யூ, மற்றும் அஜீஸ், மற்றும் நிரந்தர நடுவர்களான பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் அடங்குவர். இந்த பருவத்தின் வெற்றியாளர் அல்கா அஜித் என அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 'தி ட்ரெயின்' என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் பின்னணி பாடகராக வெற்றியாளரான அல்கா அஜித்தை அறிமுகப்படுத்தினார். இறுதி போட்டியாளாரான் நித்யஸ்ரீ, அரையிறுதி வீரர்கள் ஸ்ரீனிஷா, மற்றும் பிரியங்கா ஆகியோர் 2011 ஆம் ஆண்டு வெளியான் தமிழ் மொழித் திரைப்படமான அவன் இவனில் பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பருவம் 3
தொகுஇந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் 17 அக்டோபர் 2011 முதல் 26 அக்டோபர் 20212 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்த 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அதன் வெற்றியாளருக்கு மூன்று படுக்கையறை கொண்ட ரூ .60 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்று பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்காக எஸ். பி. சைலஜா, நித்யஸ்ரீ மகாதேவன், மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, எஸ். சௌம்யா மற்றும் மஹதி ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டனர். பூர்ணிதா மற்றும் ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் நேர் தேர்முகத் தேர்வில் தொகுப்பாளராக இருந்தனர்.
இந்தப் பருவத்தில் மனோ, மால்குடி சுபா மற்றும் மனோ ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அவர்களுடன் குரல் பயிற்சியாளராக ஆனந்த் வைத்தியநாதன் இருந்தார். மா கா பா ஆனந்த், பாவனா மற்றும் பூர்ணிதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இந்த பருவத்தின் வெற்றியாளர் அஜீத் காலிக் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பிரகதியும், மூன்றாம் இடத்தை யாழினியும், நான்காம் இடத்தை சுகன்யாயாவும், ஐந்தாம் இடத்தை கெளதமும் வென்றனர்.
பருவம் 4
தொகுஎயார்டல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் 31 மார்ச் 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.[6] 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள முதல் தேர்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அதன் வெற்றியாளருக்கு அருண் எக்செல்லோ டெம்பிள் கிரீன் டவுன்ஷிப்பில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகரத்து வீடு பரிசாக வழங்கப்படும் என்று உறுதியளித்தது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர், மற்றும் 'ஆர்.கே' என்பவர் இயக்கியுள்ளார்.[7]
இந்த போட்டியின் இறுதி போட்டி 20 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் உள்ள தங்கவேலு இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து மாலை 6:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.[8][9] இறுதிப் போட்டியின் முடிவில் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, போட்டியாளரான ஜெசிகா ஜூட்ஸ் என்பவர் தான் வென்ற பரிசை இலங்கை தமிழ் அனாதை இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இறுதிப்போட்டியின் முடிவில் சுபோர்த்தி சந்தோஷ் ராவ் என்பவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் நான்கின் வெற்றியாளர் ஆனார். அதை தொடர்ந்து ஜெசிகா ஜூட்ஸ் என்பவர் இரண்டாம் இடத்தையும், மூன்றாவது இடத்தைப் ஹரிப்ரியா என்பவரும் வென்றார்.
பருவம் 5
தொகுசூப்பர் சிங்கர் ஜூனியரின் ஐந்தாவது பருவம் 26 நவம்பர் 2016 முதல் 17 ஜூன் 2017 வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த பருவத்தின் வெற்றியாளர் பிரித்திகா என்பவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்றார் மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள குடியிருப்பை வென்றார். இரண்டாவது வெற்றியாளாராக பாபின் 5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார். மூன்றாம் இடத்தை பிடித்த கௌரி 3 லட்சம் ரொக்கப் பரிசாகப் பெற்றார்.
பருவம் 6
தொகுசூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ஆறாவது பருவம் 20 அக்டோபர் 2018 முதல் 21 ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி 54 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[10] இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைத்து தொகுத்து வழங்க, நடுவர்களாக சித்ரா, சங்கர் மகாதேவன், எஸ். பி. பி. சரண் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆகியோர் இருந்தனர்.
இறுதிப்போட்டியின் முடிவில் கிருத்திக் என்பவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தையும் 50 லட்சம் ரூபா பணத்தையும் வென்றார். அதை தொடர்ந்து சுர்யா என்பவர் இரண்டாம் இடத்தையும் 25 லட்சம் ரூபா பணத்தையும், பூவையர் என்பவர் மூன்றாவது இடத்தையும் 10 லட்சம் ரூபா பணத்தையும் வென்றார்கள்.[11]
பருவம் 7
தொகுசூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ஏழாவது பருவம் 22 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.[12][13][14][15][16] இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைத்து தொகுத்து வழங்குகின்றனர். இந்த பருவத்தின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா ராகவேந்தர் மற்றும் நடிகரும் பாடகருமான நகுல் ஆகியோர் இருந்தனர்.[17] இந்த நிகழ்ச்சி கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
மேற்கோள்கள்
தொகு- ↑ "indya.com - STAR - VIJAY". Vijay.indya.com. 12 June 1981. Archived from the original on 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
- ↑ "Super Singer Junior 2009". vijay.indya.com. 26 December 2009. Archived from the original on 26 December 2009. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.
- ↑ "Let the music begin!". தி இந்து. 15 May 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/let-the-music-begin/article787481.ece. பார்த்த நாள்: 4 April 2015.
- ↑ "Chinmayi wishes a normal childhood for prodigiesa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 September 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Chinmayi-wishes-a-normal-childhood-for-prodigies/articleshow/42991290.cms. பார்த்த நாள்: 4 April 2015.
- ↑ "WhatToNameIt: And my last day on Airtel Super Singer". Chinmayi's official website. 21 January 2009. Archived from the original on 10 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Young Voices". The Hindu. 27 March 2014. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/young-voices/article5836752.ece.
- ↑ "The making of Super Singer". The Hindu. 5 November 2014. http://www.thehindu.com/features/metroplus/radio-and-tv/the-making-of-a-super-singer/article6567550.ece.
- ↑ "Six on a song". The Hindu. 19 February 2015. http://www.thehindu.com/features/metroplus/six-on-a-song/article6912950.ece.
- ↑ "Vijay TV's Airtel Super Singer Junior 4 Live". The Times of India. 19 February 2015. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vijay-TVs-Airtel-Super-Singer-Junior-4-Live/articleshow/46297854.cms.
- ↑ "அக்டோபர் 20 முதல் 'சூப்பர் சிங்கர் ஜுனியர் 6'". 4tamilcinema.com. Archived from the original on அக்டோபர் 20, 2018. பார்க்கப்பட்ட நாள் Oct 17, 2018.
- ↑ "சூப்பர் சிங்கர் 6 இறுதி போட்டி". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Super Singer Junior season 7 to premiere on February 22" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com.
- ↑ "சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)". cinema.dinamalar.com.
- ↑ "'பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்' - எதிர்பார்ப்பில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7". tamil.indianexpress.com.
- ↑ "'Super Singer Junior' To Premiere Its 7th Season On February 22" (in ஆங்கிலம்). www.republicworld.com.
- ↑ "Star Vijay's flagship show Super Singer Junior 7 is back from Feb 22" (in ஆங்கிலம்). www.exchange4media.com.
- ↑ "சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7". www.toptamilnews.com. Archived from the original on 2020-02-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)