பூர்ணிதா என்கின்ற கல்யாணி (பிறப்பு: 23 நவம்பர், 1990) ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், அள்ளித்தந்த வானம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.

பூர்ணிதா
பிறப்புகல்யாணி
23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 34)
மற்ற பெயர்கள்பூர்ணிதா
பணிநடிகை

பெயர் மாற்றம்

தொகு

இவர் தன்னுடைய பெயரை "பூர்ணிதா" என்று மாற்றிக்கொண்டு மறந்தேன் மெய்மறந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 திரைப்படத்திலும், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்த பிறகு தன்னுடைய உண்மையான பெயரான "கல்யாணி" என்று மாற்றிக்கொண்டார். இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

திரைப்படத்துறை

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2001 அள்ளித்தந்த வானம் ஜூலி தமிழ் குழந்தை நட்சத்திரம்
2002 ஸ்ரீ தமிழ் குழந்தை நட்சத்திரம்
2003 ரமணா தமிழ் குழந்தை நட்சத்திரம்
ஜெயம் தமிழ் குழந்தை நட்சத்திரம்
முல்லாவழியும் தென்மாவும் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2006 மறந்தேன் மெய்மறந்தேன் பூர்ணிதா தமிழ் கதாநாயகியாக அறிமுகம்
பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 கல்யாணி தமிழ்
2007 மஞ்சு குறிசே வெல்லலோ தெலுங்கு
2008 இன்பா தமிழ்
கத்திக்கப்பல் மல்லிகா தமிழ்
எஸ் எம் எஸ் மலையாளம்
பருந்து மலையாளம்
2009 மல்லி மல்லி மது சத்யநாராயணா தெலுங்கு
இளம்புயல் தென்றல் போஸ் தமிழ்

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிதா&oldid=4114286" இலிருந்து மீள்விக்கப்பட்டது