எஸ். சௌம்யா

இந்தியப் பாடகர்

சௌம்யா (பி. ஏப்ரல் 16, 1969) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

சௌம்யா
பின்னணித் தகவல்கள்
பிறப்புஏப்ரல் 16, 1969 (1969-04-16) (அகவை 55)
பிறப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கருநாடக இசை பாடகர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் முதலில் தனது தந்தை ஸ்ரீநிவாசனிடமிருந்து ஆரம்பகால இசைப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து எஸ். இராமநாதனிடமும், டி. முக்தாவிடமும் இசை பயின்றார்.

கலை வாழ்க்கை

தொகு

வேதியியல் பட்டதாரியான இவர், 'இந்திய இசையில்' முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள், பட்டறை, கற்பித்தல் நிகழ்த்தி வருகிறார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, கனடா, ஆஸ்திரேலியா, ஆங்காங், சிங்கப்பூர், நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

விருதுகள்[1]

தொகு
  • இசைப் பேரொளி, 1996; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
  • யுவ கலா பாரதி, 1990; வழங்கியது: பாரத் கலாச்சார்
  • நாத ஒலி, 2001; வழங்கியது: நாத இன்பம்
  • எம். எல். வி. விருது (சிறந்த இளம் பாடகர்), 1986; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • டி. கே. பட்டம்மாள் விருது, 1988; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • அரியக்குடி அறக்கட்டளை விருது, 1996; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • சிறந்த பெண் பாடகர் (வளர்ந்த கலைஞர்), 2000; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • சிறந்த பெண் பாடகர் (வளர்ந்த கலைஞர்), 2001; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • சங்கீத சூடாமணி விருது, 2010 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-20. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சௌம்யா&oldid=3923916" இலிருந்து மீள்விக்கப்பட்டது