சங்கீத சூடாமணி விருது
சங்கீத சூடாமணி விருது (Sangeetha Choodamani Award) சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவினால் 1971ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருது சபா நடத்தும் கோகுலாஷ்டமி இசை விழாவின் தொடக்க நாளன்று இசைத் திறமை உள்ளவரும் மக்கள் நன்மதிப்பைப் பெற்றவருமான ஒரு இசைக் கலைஞருக்கு வழங்கப்படுகிறது. விருதைப் பெறும் கலைஞருக்கு சால்வை போர்த்தப்பட்டு ஒரு தங்கப் பதக்கம், 50,000 ரூபா பணமுடிப்பு, பாராட்டுப் பத்திரம் என்பன வழங்கப்படுகின்றன.