ஆர். வேதவல்லி
ஆர். வேதவல்லி (பி. 1935) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஆர். வேதவல்லி தமிழ்நாட்டின் மன்னார்குடியில் ராமசாமி ஐயங்காருக்கும் பத்மாசனி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
தொகுதனது இளம்வயது முதல் பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். அகில இந்திய வானொலியின் 'பழமைவாய்ந்த இசை'க்குரிய முதற்பரிசினை இவர் பெற்றுள்ளார். இப்பரிசு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
விருதுகள்
தொகு- சங்கீத கலாநிதி விருது, 2000; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை[2]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1995; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- சங்கீத சூடாமணி விருது, 1985 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=879506&Print=1