சிக்கில் சகோதரிகள்

சிக்கில் சகோதரிகள் (Sikkil Sisters – Kunjumani & Neela) என்றறியப்படும் குஞ்சுமணியும், நீலாவும், புல்லாங்குழல் கலைஞர்கள் ஆவர். இவர்கள் 1962 முதல் புல்லாங்குழல் கச்சேரிகள் நடத்தினர். இவர்களின் தந்தையும் மிருதங்க கலைஞருமான ஆழியூர் நடேச அய்யரிடமும், மாமா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடமும், சிக்கில் குஞ்சுமணி புல்லாங்குழல் வாசிக்கக் கற்றார். குஞ்சுமணியும் நீலாவும் அவர்களுடைய ஒன்பதாம், எட்டாம் வயதுகளில் கச்சேரிகள் நிகழ்த்தத் தொடங்கினர். குஞ்சுமணி நிகழ்ச்சிகளை தனியாக நிகழ்த்தத் தொடங்கியிருந்தாலும், பெரும்பாலான கலைநிகழ்ச்சிகளைத் தன் தங்கை நீலாவுடன் இணைந்தே நிகழ்த்தினார். இவர்கள் அனைத்திந்திய வானொலியின் முதுபெரும் கலைஞர்கள் ஆவர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர். சிக்கில் குஞ்சுமணி 2010 நவம்பர் 13 ஆம் நாள் சென்னையில் தன் 83 ஆம் வயதில் இறந்தார்.[1][2]

விருதுகளும் பட்டங்களும்

தொகு

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கில்_சகோதரிகள்&oldid=3833028" இலிருந்து மீள்விக்கப்பட்டது