சங்கீத கலாநிதி விருது

(சங்கீத கலாநிதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருநாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கருநாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கருநாடக இசையுலகில் மிக உயர்ந்த விருதாக இவ்விருது அனைவராலும் கருதப்படுகிறது.

சங்கீத கலாநிதி விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்

தொகு

1929 ஆம் ஆண்டு முதல் இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.[1]

ஆண்டு விருது பெற்றவர் பிரிவு
2024 டி. எம். கிருஷ்ணா வாய்ப்பாட்டு
2023 பாம்பே ஜெயசிறீ வாய்ப்பாட்டு
2022 லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி வயலின்
2021 திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கம்
2020 நெய்வேலி சந்தானகோபாலன் வாய்ப்பாட்டு
2019 எஸ். சௌம்யா வாய்ப்பாட்டு
2018 அருணா சாயிராம் வாய்ப்பாட்டு
2017 என். ரவிகிரண் சித்திர வீணை
2016 அ. கன்னியாகுமாரி வயலின்
2015 சஞ்சய் சுப்ரமண்யன் வாய்ப்பாட்டு
2014[2] டி. வி. கோபாலகிருஷ்ணன் மிருதங்கம்
2013[3] சுதா ரகுநாதன் வாய்ப்பாட்டு
2012 திருச்சூர் வி. இராமச்சந்திரன் வாய்ப்பாட்டு
2011 திருச்சி சங்கரன் மிருதங்கம்
2010 பம்பாய் சகோதரிகள் (C. சரோஜா மற்றும் C. லலிதா) வாய்ப்பாட்டு
2009[4] வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் தவில்
2008 ஏ. கே. சி. நடராஜன் கிளாரினெட்
2007 பாலக்காடு ஆர். ரகு மிருதங்கம்
2006 மதுரை டி. என். சேஷகோபாலன் வாய்ப்பாட்டு
2005 எம். சந்திரசேகரன் வயலின்
2004 வேலூர் ஜி. ராமபத்ரன் மிருதங்கம்
2003 டி. வி. சங்கரநாராயணன் வாய்ப்பாட்டு
2002 சிக்கில் சகோதரிகள் புல்லாங்குழல்
2001 உமையாள்புரம் கே. சிவராமன் மிருதங்கம்
2000 ஆர். வேதவல்லி வாய்ப்பாட்டு
1999 டி. கே. கோவிந்த ராவ் வாய்ப்பாட்டு
1998 சேக் சின்ன மௌலானா நாதசுவரம்
1997 எம். எஸ். கோபாலகிருஷ்ணன் வயலின்
1996 டாக்டர் என். ரமணி புல்லாங்குழல்
1995 ஆர். கே. ஸ்ரீகண்டன் வாய்ப்பாட்டு
1994 டி. கே. மூர்த்தி மிருதங்கம்
1993 மணி கிருஷ்ணசுவாமி வாய்ப்பாட்டு
1992 தஞ்சை கே. பி. சிவானந்தம் வீணை
1991 நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி வாய்ப்பாட்டு
1990 டி. கே. ஜெயராமன் வாய்ப்பாட்டு
1989 மகாராஜபுரம் சந்தானம் வாய்ப்பாட்டு
1988 டி. விஸ்வநாதன் புல்லாங்குழல்
1987 பி. ராஜம் ஐயர் வாய்ப்பாட்டு
1986 கே. வீ. நாராயணசுவாமி வாய்ப்பாட்டு
1985 டாக்டர் எஸ். ராமநாதன் வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர்
1984 மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார் வீணை
1983 டாக்டர் எஸ்.பினகபாணி வாய்ப்பாட்டு
1982 எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் ஹரிகதை (கதாகாலச்சேபம்)
1981 டி. எம். தியாகராஜன் வாய்ப்பாட்டு
1980 டி. என். கிருஷ்ணன் வயலின்
1979 கே. எஸ். நாராயணசுவாமி வீணை
1978 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர்
1977 எம். எல். வசந்தகுமாரி வாய்ப்பாட்டு
1976 டி. பிருந்தா வாய்ப்பாட்டு
1975 வழங்கப்படவில்லை
1974 ஆர். அனந்தகிருஷ்ண சர்மா வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர்
1973 டி. தஞ்சாவூர் பாலசரஸ்வதி பரதநாட்டியம்
1972 பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி இசை ஆராய்ச்சியாளர்
1971 பாபநாசம் சிவன் வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர்
1970 தா. கி. பட்டம்மாள் வாய்ப்பாட்டு
1969 மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் வாய்ப்பாட்டு
1968 ம. ச. சுப்புலட்சுமி வாய்ப்பாட்டு
1967 வழங்கப்படவில்லை
1966 பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் மிருதங்கம்
1965 ஆலத்தூர் ஸ்ரீனிவாச ஐயர் (ஆலத்தூர் சகோதரர்கள்) வாய்ப்பாட்டு
1964 ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயர் (ஆலத்தூர் சகோதரர்கள்) வாய்ப்பாட்டு
1963 பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் கோட்டு வாத்தியம்
1962 பாப்பா கே. எஸ். வெங்கடராமையா வயலின்
1961 திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை நாதசுவரம்
1960 டி. கே. ஜெயராம ஐயர் வயலின்
1959 மதுரை மணி ஐயர் வாய்ப்பாட்டு
1958 ஜி. என். பாலசுப்பிரமணியம் வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர்
1957 மைசூர் டி. சௌடையா வயலின்
1956 திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை நாதசுவரம்
1955 மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் வயலின்
1954 சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை வாய்ப்பாட்டு
1953 திருப்பாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை புல்லாங்குழல்
1952 காரைக்குடி சாம்பசிவ ஐயர் வீணை
1951 செம்பை வைத்தியநாத பாகவதர் வாய்ப்பாட்டு
1950 கரூர் சின்னசுவாமி ஐயர் வயலின்
1949 முடிகொண்டான் வெங்கடராம ஐயர் வாய்ப்பாட்டு
1948 கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின்
1947 செம்மங்குடி சீனிவாச ஐயர் வாய்ப்பாட்டு
1946 வழங்கப்படவில்லை
1945 மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வாய்ப்பாட்டு
1944 டி. எல். வெங்கட்ராம ஐயர் இசை ஆராய்ச்சியாளர்
1943 பல்லடம் சஞ்சீவ ராவ் புல்லாங்குழல்
1942 மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் வாய்ப்பாட்டு
1941 பேராசிரியர் துவாரம் வெங்கடசுவாமி நாயுடு வயலின்
1940 கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் ஹரிகதை (கதாகாலச்சேபம்), இசையமைப்பாளர்
1939 முசிரி சுப்பிரமணிய ஐயர் வாய்ப்பாட்டு
1938 அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் வாய்ப்பாட்டு
1937 மாங்குடி சிதம்பர பாகவதர் ஹரிகதை (கதாகாலச்சேபம்)
1936 உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் வாய்ப்பாட்டு
1935 மைசூர் வாசுதேவாச்சாரியார் வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர்
1934 டி. எஸ். சபேச ஐயர் வாய்ப்பாட்டு
1933 க. பொன்னையா பிள்ளை இசையமைப்பாளர், இசை ஆசிரியர்
1932 டைகர் வரதாச்சாரியார் வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர், இசை ஆசிரியர்
1931 பழமனேரி சுவாமிநாத ஐயர் வாய்ப்பாட்டு, வயலின்
1930 ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இசையமைப்பாளர், வாய்ப்பாட்டு, ஹரிகதை (கதாகாலச்சேபம்), கோட்டுவாத்தியம்
1929 டி. வீ. சுப்பா ராவ், டி. எஸ். சபேச ஐயர், எம். எஸ். ராமசுவாமி ஐயர் இசை ஆராய்ச்சியாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Sangita Kalanidhi conferred on TVG
  3. Sudha Ragunathan is Sangita Kalanidhi
  4. Sangita Kalanidhi for Valayapatti A.R. Subramaniam
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீத_கலாநிதி_விருது&oldid=4127371" இலிருந்து மீள்விக்கப்பட்டது