திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி

(திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை

திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை (Tiruvidaimarudur P. S. Veerusamy Pillai) (நவம்பர் 9, 1896 - ஏப்ரல் 19, 1973)[உ 1] தென்னிந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாதசுவர வாத்திய இசைக் கலைஞர் ஆவார். =

நாதசுவர கலைஞராகதொகு

திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரான இவர் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையுடன் ஜோடியாக நாதசுவரம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்.[1]

பாரி வகை நாதசுவரத்தைப் பயன்படுத்திய வீருசாமி பிள்ளை, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்தார். [2]

அவர் மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை ஆகிய சமஸ்தான அரசவைகளில் நாதசுவர கச்சேரிகள் செய்தார்.

அது மட்டுமின்றி தில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களிலும், திருப்பதி தேவஸ்தானம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய சமய தலங்களிலும் நாதசுவரம் வாசித்தார்.

அகில இந்திய வானொலியின் தில்லி, ஐதராபாத், சென்னை ஆகிய வானொலி நிலையங்களில் முதல் நிலைக் கலைஞராகத் திகழ்ந்தார்.[3]

இசை ஆர்வம் காரணமாக ஜி. என். பாலசுப்பிரமணியம் சகுந்தலை திரைப்படத்தில் காம்போதி ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் சேர்த்து பாடிய "எனை மறந்தனன்" என்ற விருத்தம் வரும் காட்சியை பல தடவைகள் பார்த்தார். [4]

நாதசுவர இசை ஆசிரியராகதொகு

சுவாமிமலை, பழனி ஆகிய இடங்களில் அமைந்திருந்த நாதசுவர பயிற்சிப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றினார்.

வானொலி நிலையங்களில் இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் முதன்மைத் தேர்வாளராகவும் பணியாற்றினார்.[3]

மாணாக்கர்தொகு

இவரது மருகர் வயலின் வித்துவான் மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை,[5] இவரது சகோதரரின் மகனும் நாதசுவர வித்துவானுமாகிய இசைப்பேரறிஞர் திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா[6] ஆகியோர் இவரது மாணாக்கராவர்.

விருதுகளும் பாராட்டுகளும்தொகு

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைதொகு

  1. பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் என்ற நூல். தகவல்: பரிவாதினி