திருவாவடுதுறை
திருவாவடுதுறை (Thiruvavaduthurai also written as Thiruvaduthurai) என்பது தென்னிந்தியா, தமிழ் நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள 55 வருவாய் கிராமங்களுள் ஒன்றாகும்.
திருவாவடுதுறை | |||||||
ஆள்கூறு | 11°02′25″N 79°31′05″E / 11.040362°N 79.51817°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாவட்டம் | மயிலாடுதுறை | ||||||
ஊராட்சி தலைவர் | சாந்திதர்மன் | ||||||
மக்களவைத் தொகுதி | திருவாவடுதுறை | ||||||
மக்கள் தொகை | 7,093 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
நிருவாகத் தகவல்
தொகுமாவட்டம்: மயிலாடுதுறை
வட்டம்: குத்தாலம்[2]
அஞ்சல்: திருவாவடுதுறை
மக்கள் தொகை: 2011 கணக்கெடுப்பின்படி திருவாவடுதுறையில் 1567 குடும்பங்களைச் சேர்ந்த 7093 நபர்கள் (3389 ஆண்கள் + 3704 பெண்கள்) வசிக்கிறார்கள்.[3]
அமைவிடம்
தொகுமயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. (கிடைக்கோடு 11°2'30"வ நெடுங்கோடு 79°31'16"கி)[4]
சமயத் தலங்கள்
தொகுஇங்குள்ள திருவாவடுதுறை ஆதீனம் பிரசித்தி பெற்றது.
அருள்மிகு ஒப்பிலாமுலையம்மை உடனுறை மாசிலாமணியீசுரர்[5] (திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவராதலால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்)[6]முதற் பராந்தகன் காலத்திய கல்வெட்டிலிருந்து இக்கோவில் புரட்டாசி விழாவில் ஒருநாளில் திருமூலர் நாடகமும் - ஆரியக் கூத்தும் நடந்து வந்ததாகத் தெரிய வருகிறது. [7]
ஊர் சிறப்பு
தொகுதிருவாவடுதுறைக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று. [8]
சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையும் உலகப் புகழ் பெற்றதுமான திருமந்திரத்தை திருமூலர் திருவாவடுதுறையிலேயே இயற்றியதோடு அவர் அங்கேயே சமாதிநிலை அடைந்தார்..[9]
ஊர்க்கோவிலில் வெள்ளை வேம்பு மரம் காணப்படுகிறது.[10]
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
தொகுதிருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும். [11]
ஊரின் பிரபல நபர்கள்
தொகுநாதசுவர வித்துவான் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இந்த ஊரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.
அண்மையிலுள்ள நகரங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Kuthalam.pdf
- ↑ "குத்தாலம் வட்டம் வருவாய் கிராமங்கள்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
- ↑ View Population details
- ↑ திருவாவடுதுறை அமைவிடம்
- ↑ ஆவடுதுறை
- ↑ அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
- ↑ திருவாவடுதுறை
- ↑ "திருவாவடுதுறை ஆதீனம்". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.
- ↑ 63 Nayanmars !! Life of Thirumula Nayanar !!
- ↑ Thiruvaduthurai[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002