குத்தாலம்
குத்தாலம் (ஆங்கிலம்:Kuthalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.[3]குத்தாலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது .
குத்தாலம் | |
ஆள்கூறு | 11°4′19″N 79°33′27″E / 11.07194°N 79.55750°E |
நாடு | இந்தியா |
பகுதி | சோழ நாடு |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
வட்டம் | குத்தாலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பெருந்தலைவர் | சங்கீதா மாரியப்பன் |
மக்கள் தொகை | 16,125 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.townpanchayat.in/kuthalam |
இது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
- தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துருத்தி என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். திருமணஞ்சேரி கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுமயிலாடுதுறை - கும்பகோணம் செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கிமீ, கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு6.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் வகைப்பாடு
தொகு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.79% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். [5][6][7]
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kuthalam Population Census 2011
- ↑ http://www.townpanchayat.in/kuthalam/population
- ↑ Kuthalam Town Panchayat