குத்தாலம் வட்டம்
குத்தாலம் வட்டம் , தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக குத்தாலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 131,948 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 64,869 ஆண்களும், 67,079 பெண்களும் உள்ளனர். 32,952 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 87.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.45% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 40,015 மற்றும் 62 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.16%, இசுலாமியர்கள் 9.52%, கிறித்தவர்கள் 4.27% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[2]