மயிலாடுதுறை மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் (Mayiladuthurai district) என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.[1][2][3][4][5]

மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்டம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
நிலப்பரப்புசோழ நாடு
தோற்றுவித்தவர்எடப்பாடி க. பழனிசாமி
வட்டங்கள்குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி
அரசு
 • மாவட்ட ஆட்சியர்மகாபாரதி, இ.ஆ.ப.
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்மீனா, இ.கா.ப.
பரப்பளவு
 • மொத்தம்1,172 km2 (453 sq mi)
 • பரப்பளவு தரவரிசை38
ஏற்றம்
11 m (36 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்9,17,000
 • தரவரிசை34
 • அடர்த்தி782/km2 (2,030/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
609 001
வாகனப் பதிவுTN 82
இணையதளம்https://mayiladuthurai.nic.in

இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக மயிலாடுதுறை உள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிட்டது.[6]

இம்மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய 12 சூலை 2020 அன்று சிறப்பு அதிகாரியாக ஆர். லலிதா, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா இ.கா.ப. நியமிக்கப்பட்டுள்ளனர்.[7][8]

மயிலாடுதுறை மாவட்டம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு நாகப்பட்டிணம் வட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக 28 டிசம்பர் 2020 அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி என நான்கு வருவாய் வட்டங்கள், 15 குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களைக் கொண்டிருக்கும்.[9][10]

மாவட்ட எல்லைகள்

தொகு

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் 2 வருவாய்க் கோட்டங்களையும், 4 வருவாய் வட்டங்களையும், 15 குறுவட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[11]

வருவாய் கோட்டங்கள்

தொகு

வருவாய் வட்டங்கள்

தொகு
 1. மயிலாடுதுறை வட்டம்
 2. சீர்காழி வட்டம்
 3. குத்தாலம் வட்டம்
 4. தரங்கம்பாடி வட்டம்

உள்ளாட்சி & ஊரக வளர்ச்சி அமைப்புகள்

தொகு

நகராட்சிகள்

தொகு
 1. மயிலாடுதுறை
 2. சீர்காழி

பேரூராட்சிகள்

தொகு
 1. குத்தாலம்
 2. தரங்கம்பாடி
 3. மணல்மேடு
 4. வைத்தீசுவரன்கோவில்

ஊராட்சி ஒன்றியங்கள்

தொகு
 1. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
 2. சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
 3. குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
 4. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
 5. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

தொகு

மயிலாடுதுறை மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எஸ். இராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள்
சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) பி. வி. பாரதி
மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) வி. இராதாகிருஷ்ணன்
பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) எஸ். பவுன்ராஜ்

வழிபாடு & சுற்றுலா இடங்கள்

தொகு

தொழில் நிலவரம்

தொகு

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.ஆண்டு தோறும் சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்தும் மாவட்ட அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது

பிரபலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு". இந்து தமிழ் (24 மார்ச், 2020)
 2. "கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!".ஒன்இந்தியா தமிழ் (24 மார்ச், 2020)
 3. Mayiladuthurai to become Tamil Nadu's 38th district
 4. Nagapattinam to be bifurcated to create Mayiladuthurai district, says Tamil Nadu Chief Minister
 5. Mayiladuthurai to be Tamil Nadu’s 38th district
 6. "மயிலாடுதுறை மாவட்டம் அரசாணை வெளியீடு". தினமலர் (08 ஏப்ரல், 2020)
 7. மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்; சிறப்பு அதிகாரியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு
 8. Special Officer, SP appointed for Mayiladuthurai district
 9. தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
 10. தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது
 11. மயிலாடுதுறை மாவட்டம்-Revenue Administration
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாடுதுறை_மாவட்டம்&oldid=4015151" இலிருந்து மீள்விக்கப்பட்டது