சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பிரம்மபுரம், சீர்காழி
பெயர்:சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
அமைவிடம்
ஊர்:சீர்காழி
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர்:சோமஸ்கந்தர்
தாயார்:பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம்:பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
ஆகமம்:பஞ்சரத்திர ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்
Sirkazi sattanathan Temple 1.JPG


தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.

இறைவன், இறைவிதொகு

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் பிரமபுரீசன். இறைவி திருநிலை நாயகி.

சட்டைநாதர்தொகு

மகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாகப் போர்த்திய சட்டைநாதர் திருமேனி சிறப்புடையது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

  1. வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10