சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.
சேக்கிழார் சைவநூலான பெரியபுராணத்தின் ஆசிரியராவார். இவர் அருண்மொழி ராம தேவர் என்ற இயற்பெயரோடு குன்றத்தூரில் பிறந்தவர். இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்தவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புபெயரும் பெற்றார். அம்மன்னன் சமண நூலான சீவக சிந்தாமணியை போற்றுவதை கண்டு சைவநெறியின் மேன்மையை உணர்ந்து வாழ்ந்த அறுபத்து மூன்று சைவர்களின் வாழ்க்கை குறிப்புகள் கொண்ட நூலை இயற்ற எண்ணினார். தில்லை சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பெரியபுராண காப்பிய நூல் இயற்றப்பட்டது என்பர்.
இவரை தொண்டர் சீர் பரவுவார் என்று குலோத்துங்க சோழன் சிறப்பித்துள்ளார். இவருடைய வரலாற்றினை சேக்கிழார் புராணம் என்று உமாபதி சிவாச்சாரியாரும், சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் எழுதியுள்ளனர்.
இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். இது ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.
ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.
கட்வங்கம் என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.
மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் மட்டுமே பாண்டிய நாடு முழுவதும் சமண இருள் சூழந்திருந்த போதும், சைவ மதத்தில் இருந்தார்கள்.
பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
விக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.