முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஞானியார் அடிகள் (மே 17, 1873- பிப்ரவரி 1, 1942) சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, பேச்சாளர், உரையாசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர். தமிழிலும், வடமொழியிலும் பெரும் தேர்ச்சிக் கொண்டவர். தமிழையும் சைவத்தையும் ஒன்றாக எண்ணிய இவர் சைவசித்தாந்த பெருமன்றம், வாணிவிலாச சபை போன்ற அமைப்புகளை உருவாக்கினார். இவர் திருக்கோவிலூர் மடத்தின் தலைவராகவும் இருந்தார்.

வாழ்க்கைதொகு

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே திருநாகேச்சரம் என்ற ஊரில் வீரசைவ செங்குந்தர் மரபில் தோன்றிய ஞானியார் அடிகளின் இயற்பெயர் பழனி. இவரின் பெற்றோர் அண்ணாமலை - பார்வதி அம்மையார். இவர் நவம்பர் 20, 1889 அன்று திருக்கோவலூர் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் துறவு மேற்கொண்டார்.

ஆதாரம்தொகு

  • வெள்ளையாம்பட்டு சுந்தரம் எழுதிய “ஞானியார் அடிகள்”
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானியார்_அடிகள்&oldid=2558709" இருந்து மீள்விக்கப்பட்டது