வல்லிக்கண்ணன்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.[1] எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ரா. சு. கிருஷ்ணசாமி
பிறப்புரா. சு. கிருஷ்ணசாமி
(1920-11-12)நவம்பர் 12, 1920
ராஜவல்லிபுரம், தமிழ்நாடு
இறப்பு9 நவம்பர் 2006(2006-11-09) (அகவை 85)
புனைபெயர்வல்லிக்கண்ணன்
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைசிறுகதை, மொழிபெயர்ப்பு கதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1978)
கையொப்பம்

சில நூல்கள்

தொகு

அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]

 1. கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
 2. நாட்டியக்காரி - 1944
 3. உவமை நயம் (கட்டுரை) - 1945
 4. குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
 5. கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
 6. பாரதிதாசனின் உவமை நயம் - 1946
 7. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
 8. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
 9. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
 10. மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
 11. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
 12. ராதை சிரித்தாள் - 1948
 13. கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
 14. எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
 15. விடியுமா? நாடகம் - 1948
 16. ஒய்யாரி (குறுநாவல்) - 1949
 17. அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
 18. கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
 19. அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
 20. விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
 21. நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
 22. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
 23. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
 24. அத்தை மகள் (குறுநாவல்) - 1950
 25. முத்தம் (குறுநாவல்) - 1951
 26. செவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951
 27. கடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
 28. இருளடைந்த பங்களா (கதை) - 1952
 29. வல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
 30. நம் நேரு (வரலாறு) - 1954
 31. விஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954
 32. லால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957
 33. சகுந்தலா (நாவல்) - 1957
 34. கார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
 35. சின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957
 36. தாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959
 37. விடிவெள்ளி (குறுநாவல்) - 1962
 38. அன்னக்கிளி (நூல்) - 1962
 39. ஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964
 40. முத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
 41. வசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966
 42. வீடும் வெளியும் (நாவல்) - 1967
 43. அமர வேதனை (கவிதை) - 1974
 44. வாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975
 45. புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
 46. ஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979
 47. காலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980
 48. சரச்வதி காலம் கட்டுரை) - 1980
 49. நினைவுச் சரம் (நாவல்)- 1980
 50. அலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
 51. பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
 52. இருட்டு ராஜா (நாவல்) - 1985
 53. எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
 54. ராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
 55. சரஸ்வதி காலம் - 1986
 56. புதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
 57. வாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
 58. மக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
 59. வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
 60. அருமையான துணை (சிறுகதைகள்) - 1991
 61. மன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
 62. தமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
 63. வல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
 64. மனிதர்கள் சிறுகதைகள் - 1991
 65. ஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991
 66. சுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994
 67. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
 68. சமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
 69. பெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
 70. வல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
 71. தீபம் யுகம் (கட்டுரை) - 1999
 72. வல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000
 73. ஒரு வீட்டின் கதை; கல்பனா இதழ்
 • அ.நா.பாலகிருஷ்ணன் தொகுப்பில் இடம் பெறாத மேலும் சில நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
 1. தமிழில் சிறு பத்திரிகைகள் - 1991

சான்றாவணங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. நூல் : தமிழ்ச் சொல்லாக்கம், சுரதா, பக்கம் 144
 2. அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” - ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சென்னை வெளியீடு. முதற்பதிப்பு 2000.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லிக்கண்ணன்&oldid=3712774" இலிருந்து மீள்விக்கப்பட்டது