உருத்திராட்சம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. |
உருத்திராக்கம் (Elacocarpus Ganitrus Roxb, Rudraksha) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. நேபாளத்தில் அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன.
உருத்திராட்சம் | |
---|---|
Leaves and fruit on the ground in Keʻanae Arboretum, note this may actually be E. grandis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. angustifolius
|
இருசொற் பெயரீடு | |
Elaeocarpus angustifolius Blume[2] | |
வேறு பெயர்கள் [3] | |
பட்டியல்
|
உருத்திராக்கம் சமய நம்பிக்கை
தொகுஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.
உருத்திராக்கம் குறித்த சில பாடல் கருத்துக்கள்
தொகு- "தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" - திருப்புகழ் 475
- அள்= கூர்மை (திவா). அள் --> அள்கு --> அகு.
- வெள் --> வெள்கு -->வெகு = விரும்பு, மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு.
- அகு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.
- "உருப்புலக்கை அணிந்தவர் " - திருவானைக் கோச் செங். 4
- அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.
- விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.
வேறு பெயர்கள்
தொகுகடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறு பெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர் முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.
கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.
கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள் மணி என்பதும் கண்மணி என்று புணரும்.
- கண்டு --> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம்.
- கண்டி --> கண்டிகை = உருத்திராக்க மாலை.
மேலும், சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.
தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி
தொகுவிண்ணவன் = விண்ணு --> விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம். இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லைப் பெருமாள் கோயிலுக்குப் பயன் படுத்துவதைப் பார்க்கிறோம்.
உண்ணம் --> உஷ்ணம் (இதிலும் தலை கீழாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.) உண்ணம்தான் முதல்; உஷ்ணம் அல்ல. உண்ணம் என்பதோடு பொருளால் தொடர்பு கொண்ட பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன.
இன்றையத் தமிழர்க்குப் பொதுவாக மதத்துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணி என்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம் என்பது அக்ஷ என்னும் வடசொற் திரிபே என்றும், ஆரியப் புராணப் புரட்டையெல்லாம் முழு உண்மை என்றும், அதை ஆராய்தல் இறைவனுக்கு மாறான அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆரிய வேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன் என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப் பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச் சொல்லோடு எள்ளளவும் தொடர்பில்லை. அந்தி வண்ணன், அழல் வண்ணன், செம்மேனியன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.
சிவ நெறி குமரி நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்து விட்ட தூய தமிழ் மதமாதலாலும், அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக் கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குள் புகும் முன்னரே, தமிழர் இந்தியா முழுதும் பரவி வட இந்தியத் தமிழர் முன்பு திராவிடராயும், பின்பு பிராகிருதராயும் மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும், அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப்படி முண்மணி என்பதே அப்பெயர்ப் பொருளாம்.
அக்கு என்பதே முதன் முதல் தோன்றிய இயற்கையான பெயர். அது 'அம்' என்னும் பெருமைப் பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது. முத்து -->முத்தம் (பரு முத்து) அக்கம் = பருத்த சிவ மணி.
சைவருக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்; மற்றவை திருநீறும்; திருவைதெழுத்தும்."
உருத்திராக்கம்: மந்திரம்
தொகுசாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும் போது "நெற்றியில் பட்டை", "காவிச் சட்டை", "கழுத்தில் கொட்டை" என்று வேடிக்கையாகவும், சில சமயங்களில் வினையாகவும் சொல்வதுண்டு.
ஒரு முகம்
தொகு- மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர்.
ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.
இரண்டு முகம்
தொகு- மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. (மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும்.
மூன்று முகம்
தொகு- மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.
நான்கு முகம்
தொகு- மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.
ஐந்து முகம்
தொகு- மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய உருத்திராட்சத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராட்ச மாலை அணிந்தோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராட்ச மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.
ஆறு முகம்
தொகு- மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.
ஏழு முகம்
தொகு- மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.
எட்டு முகம்
தொகு- மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும்.
ஒன்பது முகம்
தொகு- மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.
பத்து முகம்
தொகு- மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.
பதினோரு முகம்
தொகு- மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.
பன்னிரண்டு முகம்
தொகு- மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.
பதின்மூன்று முகம்
தொகு- மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர். மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.
பதினான்கு முகம்
தொகு- மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.
பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்
தொகுபண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
கௌரி சங்கர்
தொகு- மந்திரம் - ஓம் கௌரி சங்கராய நமஹ
இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன. உருத்திராக்கத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும்.
மந்திரமும் எண்ணும்
தொகு- "ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,
- தற்புற மந்திரத்தால் ' செவியொன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;
- கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க;
- உரத்தில் [மார்பில்] 49 அணிக;
- தோள்களில் 16ம் அணிக ;
- மதரத்து 12 ம் அணிக;
- பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்
- மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;
- இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]
மணி அளவு
தொகுபெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.
- நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;
- இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;
- கடலை அளவுடையது அதமம்.
இதனைப் பின்வரும் வெண்பா ;
- "உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;
- மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
- இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;
- பாசவிதம் பாற்ற நினைப் பார். "
செபமாலைக்குரிய மணிகள்
தொகுஇரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.
இதனைக் கூறும் பாடல்:
- இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
- இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனே
- பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;
- மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.
செபத்துக்குரிய விரல்
தொகுஅங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் . [அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல் ; கனிஷ்டை- சுண்டு விரல்.]
பொது
தொகுசிவபக்தருக்குக் உருத்திராக்க தானம் செய்வது சிறப்புடையது. உருத்திராக்கம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம். மேற்கண்டபவைகளைக் கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி அருளிய 'உருத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.( திருவாடுவடுதுறை ஆதீனம் 1954- வெளியீடு.)
அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச் சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். தன் பொருள் "மும்மை " என்பது உருத்திராக்கம், ஜடை, திருநீறு .இந்த மூன்றையே உண்மைப் பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.
பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும் உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும் அறியவரும். திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன், வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில் கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தைக் கட்டினான். காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலைக் கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின் தந்தையாகிய பரமேசுவரவர்மன் மகா பலிபுரத்தில் 'கணேசர்' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.
இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்ககள் கல் வெட்டில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலேடையாக உள்ளது. அதில் இரண்டாவது, ஆறாவது சுலோகங்களில் அவ்வரசன் உருத்திராக்க மணிகளாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்தவன் என்று அறிய வருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது காணலாம்; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.
உசாத்துணை
தொகு- ↑ Botanic Gardens Conservation International (BGCI); IUCN SSC Global Tree Specialist Group (2019). "Elaeocarpus angustifolius". IUCN Red List of Threatened Species 2019: e.T145371284A145371286. https://www.iucnredlist.org/species/145371284/145371286. பார்த்த நாள்: 23 January 2023.
- ↑ "Elaeocarpus angustifolius". Australian Plant Census. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ "Elaeocarpus angustifolius". Plants of the World Online. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.