பேச்சு:உருத்திராட்சம்

உருத்திராட்சம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையிலுள்ள நடுவுநிலையற்ற பகுதிகள் தொகு

  • ருத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை. இவை ஆற்றல் வாய்ந்த மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள் (Stress Levels) இரத்த அழுத்தம் மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hyper tension) ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன. இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concentration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.

  • கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை, இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெற முடிகின்றது எனக் கண்டு கொள்ளப்பட்டது.

  • இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரிஷிகளும் உருத்திராக்கங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழந்துள்ளார்கள்.

  • "அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown) என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டு வருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்த பின் உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) எனப் பெயர் மாறியதுமான காய்மணி இது. (Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customarily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times)

  • இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உருத்திராக்கம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.

  • உருத்திராக்கம் பற்றிய அறிவியல் முடிவுகள் என்ற பகுதிக்கு எத்தகைய நூலோ இணையதளமோ சான்றுகோள் காட்டப்படவில்லை.
  • உருத்திராக்க மணிகள் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இப்பகுதி கலைக்களஞ்சியத்தில் இடம்பெற வேண்டிய பகுதியே அன்று.
  • இக்கட்டுரையின் பெரும்பகுதி முத்துக்கமலம் எனும் தளத்திலிருந்து அப்படியே நகலெடுத்து ஒட்டப்பட்டுள்ளது. இது பதிப்புரிமை மீறும் செயல்.
  • எனது நிலை: இப்போதைக்கு இக்கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிடக்கூடாது. மிகவும் அதிகமான உரைதிருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். (ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்கவும்.)
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:21, 4 சூன் 2011 (UTC)Reply
  • இக்கட்டுரை முத்துக்கமலம் இணைய இதழ் தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது உண்மையே. முத்துக்கமலம் இதழ் என்னுடையதுதான். எனவே பதிப்புரிமை மீறல் குறித்த பயம் தேவையில்லை. தேவையில்லாத பகுதிகளை நீக்கம் செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:15, 1 சூலை 2011 (UTC)Reply

நடுநிலையற்ற பகுதிகளை பேச்சு பக்கத்தில் தொகுத்துவிட்டு. கட்டுரையை சீர்திருத்தலாமா.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:07, 21 ஆகத்து 2012 (UTC)Reply

அப்படியே செய்யுங்கள் ஜெகதீஸ்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:20, 21 ஆகத்து 2012 (UTC)Reply

நன்றி நண்பரே. நடுநிலையற்ற பகுதிகளாக சுட்டி காட்டப்பட்ட பகுதிகளை நீக்கியுள்ளேன். விக்கியின் நடைக்கு சற்று மாற்றம் செய்ய முற்படுகிறேன். ஆதரவுக்கு நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:56, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply


உருத்திராக்க மணிகள் குறித்த சில கேள்விகளும் பதில்களும் தொகு

  • உருத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?

ஆசியர்கள் மரபு வழியாக உருத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின் யோகிகளும் துறவிகளும் உருத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும், அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக அளவு சாந்தியும், குறிப்பிடத்தக்க மன அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும் ஏற்பட்டதைக் கண்டனர்.

  • உருத்திராக்கம் அணிய விதிமுறைகள் / நியமம் ஏதும் உள்ளதா?

உருத்திராக்கம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த உருத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும் பெறுவது சிறப்பாகும். நல்ல உருத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூஜை செய்து அணிவதனால், ஒருவருக்கு சாந்தி, மன அமைதி, கூர்ந்த நோக்கு, ஒருமுகக் குவிவு ஆகியன கிட்டுகின்றன. இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும், இன்றைய உலகில் மனம் தொடர்பான செயல்பாடுகளுடன் கூடிய தொழில் புரிபவர்களுக்கும் உகந்ததாக அமைகிறது. ஒரு முகக் குவியும், கூர்ந்த நோக்குமே எந்தத் துறையிலும் வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.

ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை உருத்திராக்க மணிகள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இந்த உருத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு. இந்தப் பல்வேறு முகப்புடைய மணிகள் மனிதனுடைய ஆளுமையையும், மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.

உருத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்காகவே உள்ளன. இந்த உருத்திராக்க மணிகள் நமது மனம், உடல், ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச் செய்யும். இம்மணிகள் இயற்கைக்குகந்த ஆற்றலுடன், தெய்வீகமானவையும் கூட. இதனால் உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும். மதுவை ஒழித்தல் வேண்டும். உரையாடுவதில், பேச்சில் இனிமை வேண்டும்.

  • வேறுப்பட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?

பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறு சேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர முடியும். ஒருவர், குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளையுடைய மணிகளினால் செய்யப்பட்டதை கூட அணியலாம்.

  • எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாமா?

அணியலாம். பால், வயது, பண்பாடு, இனம், நிலம், சமயப் பின்னணி குறித்த எந்தவிதப்பாகு பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம். எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.

  • உருத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?

ஒருவர் தனது உள்ளங்கையில் உருத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே அதனுடைய குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது ஆற்றலோடு இலேசாக அதிரும் சக்தியுடையது. இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப் பொறுத்தது.

  • இந்த உருத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?

நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவை. நீரில் மிதக்கும் மணிகள் போலியானவை என்ற அடிப்படையில் நிகழ்த்தும் சோதனைகள் சரியானவை அல்ல. மரத்தினால் செய்யப்பட்டு உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை நம்பகமான இடத்தில் நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.

  • ஒரு நல்ல உருத்திராக்கத்தினை நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?

உருத்திராக்கத்தின் உருவம், அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது. இவை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட முகங்கள், சிறு மணி போன்ற அமைப்புகள், மேடுபள்ளக் கோடுகள் இவையெல்லாம் இயல்பானதாக அமைந்துள்ளனவா என்று பார்க்க வேண்டும். அத்துடன் நடுவிலுள்ள துளைக்கு அருகில் வெடிப்புகள் இல்லாது இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். சிறிய அளவிலுள்ள மணிகள் கூட மங்களகரமானவைகள்.

  • உருத்திராக்கத்தை அணிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

உருத்திராக்க அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உருத்திராக்கத்தை எப்போதும் அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய வேண்டும். இந்துக்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்றில்லை. எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாம்.

  • உருத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?

எத்தனை ஆண்டுகளுக்கும் இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக் கூட வைத்துக் கொள்ளலாம்.

  • ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள், ஜபமாலைகள் உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?

இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால், இவற்றை ஒருவரின் வாழ்விறுதிக்குப் பின்பு மற்றவர் பயன்படுத்தலாம்.

பேச்சு பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்,.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:09, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Rudraksha vs Elaeocarpus angustifolius தொகு

இக்கட்டுரை மரம் பற்றி அதிகம் குறிப்பிடாது, சமயச்சின்னம் பற்றியே அதிகம் குறிப்பிடுகிறது. ஆகவே சரியான தலைப்பில் ஒரு கட்டுரை உருவாக்கி, இதன் பகுதிகளை அங்கு நகர்த்தல் வேண்டும். காண்க: en:Elaeocarpus angustifolius, en:Rudraksha. @Selvasivagurunathan m: AntanO (பேச்சு) 14:50, 10 சனவரி 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உருத்திராட்சம்&oldid=3865708" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உருத்திராட்சம்" page.