கமலை ஞானப்பிரகாசர்
கமலை ஞானப்பிரகாசர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ ஆசாரியார்.
கமலை என்பது திருவாரூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. (கமலமுனி சித்தர் முக்தி அடைந்த தலமாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது.)
இவர் குருஞான சம்பந்தருக்குக் குரு.
குருஞான சம்பந்தர் தருமபுர மடத்தைத் தோற்றுவித்தவரும் மயிலாடுதுறையை அடுத்த திருப்பனந்தாள் மடத்தின் தலைவராக விளங்கியவருமாவார்.
பிறப்பு
தொகு- ஊர் - திருவாரூர் செட்டித்தெரு
- வேறு பெயர்கள் - திருவாரூர் ஞானப்பிரகாசர், செட்டித்தெரு ஞானப்பிரகாசர், தேசிகர், பட்டாரகர், பழுதை கட்டி ஞானப்பிகாச பண்டாரம் என்பன.
- பரம்பரை - சீகாழி சிற்றம்பல நாடிகள் என்பவரின் பரம்பரையில் சில தலைமுறைகளுக்குப் பின்னர் வந்தவர் தருமை சிதம்பரநாத முனிவர். இவர் இயற்றியது 'ஞானப்பிரகாச மான்மியம்' என்னும் நூல். இந்த நூல் அச்சிடப்படவில்லை.
- கமலை ஞானப்பிரகாசரின் குரு - சிவபுரம் தத்துவப் பிரகாச பண்டாரம்
நூல்கள்
தொகுகமலை ஞானப்பிரகாசர் எழுதிய நூல்கள்
- அண்ணாமலைக் கோவை
- அத்துவாக் கட்டளை
- அத்துவித சாரம்
- ஆயிரப் பிரபந்தம்
- சாதிநூல்
- சிவபூசை அகவல்
- சிவானந்த போத சாரம்
- சைவானுட்டான அகவல்
- ஞானப்பள்ளு
- தியாகராசர் கழிநெடில்
- திருவானைக்கா புராணம்
- நந்திவனப் புராணம்
- பிராசாத மாலை
- புட்ப விதி
- பூமாலை
- மழபாடிப் புராணம்
- தியாகராச லீலை என்னும் நூலை இவர் வடமொழியில் பாடினார் என்று சொல்லப்படுகிறது. [1]
மாணாக்கர்
தொகுகமலை ஞானப்பிரகாசருக்கு மாணாக்கர் பலர் இருந்தனர். அவர்களில் நூல் பாடியவர்கள் மட்டும் இங்குத் தொகுத்துக் காட்டப்படுகின்றனர்.
எண் | மாணாக்கர் | காலம் | நூல் | இந்த மாணாக்கரின் மாணாக்கர் | காலம் | நூல் |
---|---|---|---|---|---|---|
1 | நிரம்ப அழகிய தேசிகர், துழாவூர் ஆதீனம் | 1550-75 | சேதுபுராணம், பரங்கிரி புராணம், சித்தியார், திருவருட்பயன் உரைகள் | அளகைச் சம்பந்த முதலியார் | 1575-1600 | திருவாரூர்ப் புராணம் |
" | " | " | " | ஞானக் கூத்தர் | 1575-1660 | செப்பேச புராணம் |
" | " | " | " | சிதம்பரநாத பூபதி | 1575-1600 | சங்கர விலாசம் |
2 | ஆன்மலிங்க மாலை ஆசிரியர் | 1550-75 | ஆன்மலிங்க மாலை | |||
3 | திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் | 1550-75 | திருவொற்றியூர்ப் புராணம், சித்தி பரபக்க உரை, சங்கற்ப நிராகரண உரை | திருவொற்றியூர்த் தத்துவப் பிரகாசர் | 1575-1600 | சித்தியார் பரபக்க உரை |
4 | குருஞான சம்பந்தர், தரும்புர ஆதீன முதல்வர் | 1550-75 | முத்தி நிச்சயம், சிவபோக சாரம், பிராசாத சட்கம், ஞானாவரண விளக்கம் | ஆனந்த பரவசர் சச்சிதானந்த தேசிகர் | 1575-1600 | |
5 | " | " | " | மதுரை ஆபதுத் தாரணர் | 1575-1600 | பூகோள விலாசம் |
6 | கருவூர்ப் புராண ஆசிரியர் | 1618 | கருவூப் புராணம் |
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, அட்டவணை, 2005
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள் குறிப்பு
தொகு- ↑ ப. அ. முத்துத் தாண்டவராயப் பிள்ளை கூற்று