சாதிநூல்

அகமுடையார்

சாதிநூல் என்னும் நூலைக் கமலை ஞானப்பிரகாசர் எழுதினார். [1] இந்நூல் சாதிகள் குறித்துப் பேசுகிறது. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு.

அது வடமொழியிலுள்ள ஆகம புராண இதிகாசங்களைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதனை எழுதியதற்கான காரணம் புலப்படவில்லை.

  • உலகநாதர் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த நூல் எழுதப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.
  • விருத்தப்பாவால் ஆன நூல்
  • இரு பகுதியாக நூல் உள்ளது.
  • நான்கு வருணங்களைச் சொன்ன பின்னர் 81 சாதிகள் இதில் சொல்லப்பட்டுள்ளன.
  • திருட்டுத்தனமான ஆண்-பெண் உறவு முறையால் [2] சாதிகள் தோன்றின என இந்நூல் குறிப்பிடுகிறது.

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்புதொகு

  1. தொண்டைமண்டலம் மயிலை சந்திர சேகர நாடார் அவர்களாலும், திருவல்லிக்கேணி சண்முக கிராமணியார் அவர்களாலும் ஆராயப்பட்டு, சென்னை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 1875 (சாலி 1797, பவ வருடம்)
  2. களவிற் பிறந்த அனுலோமர் உற்பத்தி, பிரதிலோமர் உற்பத்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிநூல்&oldid=1870246" இருந்து மீள்விக்கப்பட்டது