வலைவாசல்:சைவம்/உங்களுக்குத் தெரியுமா
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சைவ சமய வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
[[Image:|right|100px|]] * ''சிவன் பற்றிய தகவல்கள்'' * ''சிவ வடிவங்கள் பற்றிய தகவல்கள்'' * ''சிவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்'' * ''சிவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்'' * ''சிவ நூல்களைப் பற்றிய தகவல்கள்'' * ''சிவ தலங்களைப் பற்றிய தகவல்கள்'' {| class="noprint" width="100%" border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent" |- |<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:சைவம்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]'''</div> |} <noinclude> [[பகுப்பு:தகவல்கள் - சைவ வலைவாசல்]] </noinclude>
காப்பகம்
தொகு1
தொகு- கட்வங்கம் என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.
- ஆதிலட்சுமிக்கும், குபேனனுக்கும் செல்வங்களை வழங்கிய சிவபெருமானின் வடிவம் சுவர்ண ஆகர்ஷன பைரவர் என்று வழங்கப்படுகிறது. சுவர்ண ஆகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தரும் பைரவர் என்று பொருளாகும்.
- மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் மட்டுமே பாண்டிய நாடு முழுவதும் சமண இருள் சூழந்திருந்த போதும், சைவ மதத்தில் இருந்தார்கள்.
- பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
- மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது.
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதி வெள்ளியம்பலம் என அறியப்பெறுகிறது.
2
தொகு- ஐந்து முகம் கொண்ட சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது. குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
- சிவபெருமானின் அருவ வடிவம் லிங்க மூர்த்தியாகும். இம்மூர்த்தியின் வடிவம் சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திர வடிவங்களை தனக்குள் உள்ளடக்கியதாகும்.
- இசைக்கலையில் வல்லவரான இராவணன் கைநரம்புகளிலேயே யாழ் அமைத்து இசைத்து சிவபெருமானை மயங்க செய்தவர்.
- சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேசுவர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம் என ஒன்பது விரதங்கள் சிவனுக்கு உகந்ததாக நம்பப்படுகிறது.
- ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.
- தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் இருநூற்று இருபத்து நான்காகும்.
3
தொகு- ஏழு பிரளயங்களில் பெரும் பிரளயமான மகாபிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடு அனைவருக்கும் கட்டாய மோட்சம் அளித்து தனக்குள் ஒடுக்குகிறார்.
- சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
- அகச்சந்தான குரவர்கள் என திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அழைக்கப்படுகிறார்கள்.
- திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
- தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
- தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.
4
தொகு- இந்து மதத்தின் பிற தெய்வங்களில் பல்வேறு லோகங்களில் வசிக்கும் பொழுதும் சிவபெருமான் கையிலையில் வசிப்பதால் பூலோக கடவுள் எனவும் கைலாசநாதன், கையிலாசன் என்று அழைக்கப்படுகிறார்.
- சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.
- ஷிலாதர் என்பவர் சிவதவத்தினால் சிவபெருமானை மகிழ்வித்து நந்தி தேவரை மகனாக பெற்றார்.
- கார்த்திகை மாதம் பூரணை நாளில் உமாமகேசுவர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
- இராசராசன் ஆட்சி காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டவையே சைவத் திருமுறைகள் ஆகும்.
- சோழர் நாட்டில் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் காவிரி வடகரை சிவாலயங்கள், காவிரி தென்கரை சிவாலயங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.
5
தொகு- சிவபெருமான் ஆனந்த தாண்டவம் முதல் ஊழித் தாண்டவம் வரை நூற்றியெட்டு சிவதாண்டவங்களை ஆடுகிறார்.
- வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய ஐந்து குணங்களுக்கு உரிய மூர்த்திகள் பஞ்சகுண சிவமூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
- திருமால் தனது ராம அவதாரத்தில் சிறந்த சிவபக்தனாக வாழ்ந்தார்.
- மகா சிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகையான சிவராத்திரிகள் உள்ளன.
- காசி தலம் பற்றி பல்வேறு வகையான பாடல்களைக் கொண்டது காசிக் கலம்பகம் ஆகும்.
- உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்கள் சப்த விடங்க தலங்களாகும்.
6
தொகுவலைவாசல்:சைவம்/தகவல்கள்/6 [[Image:|right|100px|]]
- சிவன் பற்றிய தகவல்கள்
- சிவ வடிவங்கள் பற்றிய தகவல்கள்
- சிவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்
- சிவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்
- சிவ நூல்களைப் பற்றிய தகவல்கள்
- சிவ தலங்களைப் பற்றிய தகவல்கள்
7
தொகுவலைவாசல்:சைவம்/தகவல்கள்/7 [[Image:|right|100px|]]
- சிவன் பற்றிய தகவல்கள்
- சிவ வடிவங்கள் பற்றிய தகவல்கள்
- சிவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்
- சிவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்
- சிவ நூல்களைப் பற்றிய தகவல்கள்
- சிவ தலங்களைப் பற்றிய தகவல்கள்
8
தொகுவலைவாசல்:சைவம்/தகவல்கள்/8 [[Image:|right|100px|]]
- சிவன் பற்றிய தகவல்கள்
- சிவ வடிவங்கள் பற்றிய தகவல்கள்
- சிவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்
- சிவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்
- சிவ நூல்களைப் பற்றிய தகவல்கள்
- சிவ தலங்களைப் பற்றிய தகவல்கள்
9
தொகுவலைவாசல்:சைவம்/தகவல்கள்/9 [[Image:|right|100px|]]
- சிவன் பற்றிய தகவல்கள்
- சிவ வடிவங்கள் பற்றிய தகவல்கள்
- சிவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்
- சிவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்
- சிவ நூல்களைப் பற்றிய தகவல்கள்
- சிவ தலங்களைப் பற்றிய தகவல்கள்
10
தொகுவலைவாசல்:சைவம்/தகவல்கள்/10 [[Image:|right|100px|]]
- சிவன் பற்றிய தகவல்கள்
- சிவ வடிவங்கள் பற்றிய தகவல்கள்
- சிவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்
- சிவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்
- சிவ நூல்களைப் பற்றிய தகவல்கள்
- சிவ தலங்களைப் பற்றிய தகவல்கள்