பிரளய தாண்டவம்

(ஊழித் தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரளய தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வெற்றி பெற்றமையைக் குறிக்க இந்த தாண்டவம் ஆடப்படுகிறது.

தாண்டவக் காரணம்

தொகு

உலகில் அதர்மம் அதிகமாக தலையெடுத்தப் பின், உலகம் பிரளயத்தால் அழிவுரும் என்பது இந்து தொன்மவியல் நம்பிக்கையாகும். இந்த பிரளயக் காலத்தில் தேவர்கள், அரக்கர்கள், இந்திரன், திருமால் என அனைவரையும் ஒடுக்கி அழித்து அவர்களுடைய மண்டையோடுகளை மாலையாக அணிந்து சிவபெருமான் ஆடும் தாண்டவம் பிரளயத் தாண்டவமாகும். [1]

வேறு பெயர்கள்

தொகு

பிரளய தாண்டவத்தினை சாலியம், வீர வெறியாடல் என்றும் குறிப்பிடுகின்றனர்.[2] கைகளை கொட்ட ஆடுவதால் கொட்டி, கொட்டிச் சேதம் என்ற பெயர்களும் உண்டு. [2]


இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் பிரளய தாண்டவம்!
  2. 2.0 2.1 "ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரளய_தாண்டவம்&oldid=3254410" இலிருந்து மீள்விக்கப்பட்டது