கருணை
கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார்.[2] கருணையும் அன்பும் "மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார்.[3] இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Khazan, Olga. "It Pays to Be Nice".
- ↑ Aristotle (translated by Lee Honeycutt). "Kindness". Rhetoric, book 2, chapter 7. Archived from the original on December 13, 2004. பார்க்கப்பட்ட நாள் 2005-11-22.
- ↑ Nietzsche, Friedrich Wilhelm. "On the History of Moral Feelings," Human, all too human: a book for free spirits. Aphorism 48. [Original: Menschliches, Allzumenschiles, 1878.] Trans. Marion Faber with Stephen Lehman. University of Nebraska Press: First Printing, Bison Books, 1996.
- ↑ "The Manual of Life - Character". Parvesh singla – via Google Books.
- ↑ Kalchuri, Bhau (1986). Meher Prabhu: Lord Meher, 11, Myrtle Beach: Manifestation, Inc., p. 3918.