மெகர் பாபா

மெகர் பாபா (Meher Baba) என்பவர் ஆன்மீகவாதியாவார். இவர், தான் கடவுளின் அவதாரம் எனக் கூறினார்..[1][2][3][4][5] இவருடைய இயற்பெயர் மெர்வான் ஷெரியார் இரானி. 1894-ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பிறந்தவர். இவர் ஜோராஷ்ட்ரிய சமயத்தைத் சேர்ந்தவர். புனேயைச் சேர்ந்த ஆன்மீக குருக்கள் ஐந்து பேரிடம் சீடராக இருந்த மெகர் பாபா, 1922-ம் ஆண்டில் தனது ஆன்மீக பணிகளைச் தொடங்கினார்.1920-ம் ஆண்டு தனது சீடர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத் நகரில் ஆன்மீக அமைப்பை உருவாக்கினார். 1940களில் இந்தியா முழுவதும் பயணம் செய்து ஏழைகள்,தொழுநோயாளிகள்,மனநலப் பாதிப்புற்ற வர்களுக்கு பணி புரிவதற்கான ஆசிரமங்களை உருவாக்கினார். [சான்று தேவை] 1969ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் மெகர் பாபா இயற்கை எய்தினார்.இன்றும் அஹமது நகருக்கு அருகில் மெகராபாத்தில் அமைந்துள்ள இவரின் சமாதிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

Meher Baba
Meher Baba in 1945
முழுப் பெயர்Meher Baba
பிறப்புMerwan Sheriar Irani
பெப்ரவரி 25, 1894(1894-02-25)
பூனே, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு31 சனவரி 1969(1969-01-31) (அகவை 74)
Meherazad, India
முக்கிய ஆர்வங்கள்சமயம், metaphysics, aesthetics, ethics
கையெழுத்து

சான்றுகள்தொகு

  1. Awakener Magazine, Volume 9, Number 4, 1964, p. 15
  2. Awakener Magazine, Volume 4, Number 2, 1956, p. 27
  3. Kalchuri (1986) p. 2324
  4. Baba (1987) p. 269
  5. Awakener Magazine, Volume 11, Number 1, 1966, p. 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகர்_பாபா&oldid=2938340" இருந்து மீள்விக்கப்பட்டது