அழகியல்
அழகியல் (Aesthetics அல்லது æsthetics அல்லது esthetics என்பது அழகின் தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும்.[1] அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும், மதிப்பு, உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.[2] சற்றே விரிவான நோக்கில், கலை, பண்பாடு மற்றும் இயற்கையை பிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."[3][4] அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.[5]
தொன்மம்
தொகுஇந்திய மரபில் அழகியல் இன்பத்தை ‘ரசம்’ எனும் பதத்தினால் குறித்தனர். இப் பதம் இருக்கு வேதத்திலிருந்து தோன்றியிருப்பதைக் காண முடிகின்றது. இருக்கு வேதத்தில் சோமாவதை எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட பாணத்தைக் குறிக்க ரசம் பயன்பட்டது (சோமரசம்). அவ்வாறே கலை வெளிப்பாடுகளில் பல்வேறு சுவைகளை உள்ளடக்கிய பண்பு, ரசம் எனும் எண்ணக்கருவை தருகின்றது. ரசக் கோட்பாட்டின் விரிவான வளர்ச்சியை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் காணமுடிகின்றது. நாட்டிய சாஸ்திரம் மிகத் தொன்மையான நூலாகும். அதில் நாடகங்களின் மனவெழுச்சி விளைவுகளைத் துல்லியமாக இனங்காட்டக் கூடியவாறு ரசக் கோட்பாட்டினை பரத முனிவர் வைத்துள்ளார். அதில்,
- சிருங்காரம் – காதல்
- ஹாஸ்யம் – நகைச்சுவை
- கருணை – இரக்கம்
- ருத்திரம் – கோபம்
- வீரம் – திண்டிறல்
- பயானகம் – அச்சம்
- பீபஸ்தம் – வெறுப்பு
- அற்புதம் – வியப்பு
பரதர் முன்வைத்த எட்டு ரசங்களோடு அபிநவகுப்தர் முன்வைத்த சாந்தம் எனும் ரசம் சேர்ந்து ‘நவரசங்கள்’ எனப்படுகின்றன. ரசங்கள் பொதுவாக உடலால், உரையால், உடையால் துலக்கம் பெற்றிருந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Definition 1 of aesthetics from the Merriam-Webster Dictionary Online.
- ↑ Zangwill, Nick. "Aesthetic Judgment", Stanford Encyclopedia of Philosophy, 02-28-2003/10-22-2007. Retrieved 07-24-2008.
- ↑ Kelly (1998) p. ix
- ↑ Review பரணிடப்பட்டது 2017-01-31 at the வந்தவழி இயந்திரம் by Tom Riedel (Regis University)
- ↑ Freeman, Lindsey (Phd) Remembering Debord cannon-beach.net