ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம்
வகை: பஞ்ச தாண்டவங்கள்,
சப்த தாண்டவங்கள்,
நவ தாண்டவங்கள்,
பன்னிரு தாண்டவங்கள்
வரிசை: முதல் தாண்டவம்
தரிசித்தோர்: பதஞ்சலி முனிவர்,
வியாக்ரபாதர்
இடம்: கயிலாயம்

ஆனந்த தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். ஐம்பெரும் தாண்டவம், சப்த தாண்டவம், நவ தாண்டவம் மற்றும் பன்னிரு தாண்டவம் என்ற தாண்டவகைகளுள் முதன்மையானதாக இத்தாண்டவம் போற்றப்படுகிறது. இத்தாண்டவத்தினை காலை தொடங்கும் அதிகாலப் பொழுதினைக் குறிக்கும் அல்லியம் என்றும் குறிப்பிடப்படுகிறது. [1]

சொல்லிலக்கணம்

தொகு

அல் என்றால் இருள் என்று பொருளாகும். இருள் விலகும் நேரத்தினை அல்லியம் என்று கூறுகின்றனர்.

தாண்டவக் காரணம்

தொகு

சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தினைக் காண சிதம்பரம் தலத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார்.

நடராஜர்

தொகு

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாகவும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகிறது. இந்நடனத்தினை சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடினார். ஆனந்த தாண்டவம் ஆடும் சிவபெருமானின் கோலம் நடராஜர் என்று அறியப்பெறுகிறது.[2]

காண்க

தொகு

ஆதாரம்

தொகு
  1. http://www.vikatan.com/sakthivikatan/2012-jun-26/special-story/20316.art
  2. http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614103.htm

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_தாண்டவம்&oldid=4046271" இலிருந்து மீள்விக்கப்பட்டது