ஐந்து முகம் கொண்ட சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது. குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
சிவபெருமானின் அருவ வடிவம் லிங்க மூர்த்தியாகும். இம்மூர்த்தியின் வடிவம் சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திர வடிவங்களை தனக்குள் உள்ளடக்கியதாகும்.
இசைக்கலையில் வல்லவரான இராவணன் கைநரம்புகளிலேயே யாழ் அமைத்து இசைத்து சிவபெருமானை மயங்க செய்தவர்.
சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேசுவர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம் என ஒன்பது விரதங்கள் சிவனுக்கு உகந்ததாக நம்பப்படுகிறது.