சோம சூக்தப் பிரதட்சணம்
சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும்.
ஆலகாலம் துரத்துதல்
தொகுஅமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய திட்டமிட்டார்கள். அதற்காக மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பினை கயிறாகவும் உபயோகம் செய்து பாற்கடலை கடைந்தார்கள். ஒரு கட்டத்தில் வலி பொறுக்க இயலாத வாசுகி பாம்பு ஆலகாலம் எனும் விசத்தினை கக்கியது.
அந்த ஆலகாலம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. சிவபெருமான் இருக்கும் இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார்.
ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். [1]
காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.