முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருநந்தி தேவர்

தஞ்சாவூர் ஓவிய மரபில் நந்திதேவரின் உருவம்
மைசூர் சாமுண்டி மலையில் நந்தி சிலை
நந்திச் சிலை

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். [1]

புராண செய்திகள்தொகு

நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து

நம் பவமறுத்த நந்திவானவர்

எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

பிரதோசம்தொகு

பிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

அதிகார நந்திதொகு

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில் அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

அதிகார நந்தியும் கருடரும்தொகு

கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக விஷ்ணு கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

தன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

காட்சியகம்தொகு

காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர் கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி) சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர் செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தி_தேவர்&oldid=2551698" இருந்து மீள்விக்கப்பட்டது