தாந்திரீகம்

தாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் இந்தியா மற்றும் திபெத் பகுதிகளில் சாக்த சமயத்தவர்கள்[1][2], வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர்[3] மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.

தாந்திரிகக் கலை (மேல் இடமிருந்து, கடிகாரச் சுற்றுப்படி): இந்து தாந்திரிக தேவதை, பௌத்த தாந்திரிக தேவதை, சமண தாந்திரிக ஓவியம், குண்டலினி சக்கரங்கள், 11-ஆம் நூற்றாண்டு தாந்திரிக இயந்திரம்
ஒன்பது முக்கோணங்களில் 43 சிறிய முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீயந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரம்

இந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்ற சமயத்தவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும் கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும்.

பீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் இறைக்காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள்களையும் இறைவன் உடனேயே ஏற்றுக் கொண்டுவிடுவதாகவும் நம்பப்படுகிறது. யந்திரங்கள்[4] [5] தாந்திரீக வழிபாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்).

மேற்கோள்கள் தொகு

  1. Brooks, Douglas Renfrew, The Secret of the Three Cities: An Introduction to Hindu Shakta Tantrism The University of Chicago Press (Chicago, 1990).
  2. Bengali Shakta," World Culture Encyclopedia, South Asia.
  3. http://www.palikanon.com/english/pali_names/sa/sakka.htm
  4. Wallis, Christopher (2012). Tantra Illuminated. பக். 26. 
  5. Wallis, Christopher (2012). Tantra Illuminated. பக். 27. 

நூல் உதவி தொகு

  • இந்து மதத்தின் மையக் கருத்து, நூலாசிரியர், சுவாமி பாஸ்கரானந்தர், சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாந்திரீகம்&oldid=3913643" இலிருந்து மீள்விக்கப்பட்டது