வலைவாசல்:சைவம்/தகவல்கள்/3

  • ஏழு பிரளயங்களில் பெரும் பிரளயமான மகாபிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடு அனைவருக்கும் கட்டாய மோட்சம் அளித்து தனக்குள் ஒடுக்குகிறார்.
  • சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
  • அகச்சந்தான குரவர்கள் என திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அழைக்கப்படுகிறார்கள்.
  • திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
  • தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
  • தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.