நடராசர் கோயில்அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
பகவதி (Bhagavathi அல்லது Bhagavati) கேரளாவில்மலையாள மொழியில்இந்துபெண்கடவுளரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. சமசுகிருதத்தில் பெண்கடவுள் எனப் பொருள்படும் இச்சொல் துர்கா, பார்வதி, கண்ணகி, சரசுவதி, இலட்சுமி, காளி என பல்வேறு வடிவங்களில் தொழப்படும் பெண் கடவுள்களைக் குறிப்பதாக அங்கு அமைந்துள்ளது. இக்கடவுளரின் கோவில்கள் பகவதி சேத்திரங்கள் (கோவில்கள்) என்றழைக்கப்படுகின்றன.