அங்கன்யாசம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மந்திரம் சொல்லி, முனிவர், சந்தஸ் (தேவர்கள் ஆகிய மூவரையும் போற்றி, தலை, நாக்கு, இதயம் ஆகிய உடல் பாகங்களில் சமர்ப்பணம் செய்வதை அங்கன்யாசம் என்று அழைப்பர். எடுத்துக்காட்டுக்கு, காயத்திரி மந்திரத்தினை, விசுவாமித்திரனும், சந்தசு நிச்ருத்தும், தேவதை சவிதாவையும் போற்றி வணக்கம் செலுத்துதல். இந்த மந்திரத்தை சொல்லும்போது, ”ஸ்ய ஸ்ரீகாயத்ரீமஹாமந்த்ரஸ்ய விஸ்வாமித்ர ருஷி:” என்று கூறிக்கொண்டே, வலதுகையில் சிறுவிரலும் மோதிரவிரலும் தவிர்த்த பிற மூன்று விரல்களையும் சேர்த்து கவிழ்த்து, தலையில் ஒட்டி, ”நிச்ருத் காயத்ரி சந்த:” என்று கூறிக்கொண்டே வலதுகையின் அணிவிரலும் நடுவிரலும் சேர்த்து, பெருவிரலும் கூட்டி உள்நோக்கியவாறு நாக்கின் நுனியில் வைத்து ”சவிதா தேவதா” என்று கூறி, வலதுகையின் கட்டை விரல் தவிர்த்த மற்ற நான்கு விரல்களும் சேர்த்து மடித்து, இதயத்தில் வைத்து, மந்திரம் கூறி வணங்குவர்.
“ | ருஷிர்குருத்வாச்சிரசைவ தார்ய: சந்தோக்ஷரத்வாத்ரசனாகதம் ஸ்யாத் தியாவகந்தவ்யதயா சதைவ ஹ்ருதி ப்ரதிஷ்டா மனுதேவதாயா:. |
” |
(முனிவரை குருவாகக் கொண்டு தலையிலும், சந்தசை எழுத்துகளாக்கி நாவிலும், தேவதை, அறிவினைக் கொண்டு அறியப்படுவதால் இதயத்திலும் வைத்து மந்திரத்துடன் வணங்குதல்.)
பஞ்ச அங்கன்யாசம், ஷடங்கன்யாஸம், அஷ்ட அங்கன்யாசம் என்று வகைகள் உண்டு.