சாவித்திரன்
சாவித்திரன் (Savitṛ)[3]இந்து சமய வேதங்கள் குறிப்பிடும் அதிதி-காசியபர்|காசியருக்கு]] பிறந்த 12 ஆதித்தர்கள் ஆவர். இவர் ஆதிகம் சூரிய தேவனுடன் தொடர்புறுத்தி பேசப்படுகிறார். அதிகாலை சூரியோதயத்திற்கும், மாலை சூரிய அஸ்தமனத்திற்கும் சாவித்திரன் அதிதேவதையாக உள்ளார். எனவே வைதீகர்கள் சூரியோதயம் மற்றும் அஸ்தமன காலங்களில் சந்தியா வந்தனம் செய்யும் போது காயத்ரி மந்திரம் செபிப்பது வழக்கம்.[4]
சாவித்திரன் | |
---|---|
ஆதித்தர்கள்-இல் ஒருவர் | |
அதிபதி | சூரியோதயம் & சூரிய அஸ்தமனம் [1] |
இடம் | சூரிய லோகம் |
மந்திரம் | காயத்ரி மந்திரம் |
துணை | விருஷ்ணி பாகவத புராணம்)[2] |
குழந்தைகள் | 3 பெண்கள், 9 ஆண்கள் (பாகதவ புராணம்)[2] |
ரிக் வேதம் மூன்றாம் மண்டலத்தில் (RV 3.62.10) காயத்ரி மந்திரம் பற்றி உள்ளது. ரிக் வேதத்த்தின் 35வது மந்திரத்தில் சாவித்திரன் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது.[5][6] இந்த மந்திரத்தில் சாவித்ர் ஒரு புரவலர் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. ரிக்வேதத்தின் பதினொரு முழு மந்திரங்களிலும் மற்றும் பிற வேதங்களிலும் சாவித்திரன் கொண்டாடப்படுகிறார். வேத மந்திரங்களில் சாவித்ரன் பெயர் மொத்தம் 170 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
வேத கால முடிவில் சாவித்ரன் தேவதையின் வழிபாடு இந்துக் கடவுள் பட்டியலிலிருந்து மறைந்தாலும்[7][8], நவீன இந்து சமயத்தில் சாவித்திரன், காயத்ரி எனும் பெண் தெய்வத்தின் பெயரில் வணங்கப்படுகிறார்.
தோற்றம்
தொகுசாவித்திரன் தேவதை அழகிய, பரந்த, தங்கக் கரங்கள் உடையவர். இவருக்கு இனிமையான நாக்கும், பொன்னிற கண்களும், மஞ்சள் நிற முடி மற்றும் பளபளப்பான ஆடையை அணிந்தவர். இத்தேவதை சூரிய பகவான், அக்னி பகவான் மற்றும் இந்திரனுடன் தொடர்புடையவர். சாவித்ரன் எல்லா வடிவங்களையும் ஏற்கும் திறன் கொண்டவனாக இருப்பது போலவே, சர்வ ரூபமான தங்க அச்சு கொண்ட தங்கத் தேர் உடையவன். சாவித்திரனின் தேர் குதிரைகளால் இழுக்கப்படுகிறது. இவர் அதிகாலை சூரியோதயத்திற்கும், மாலை சூரிய அஸ்தமனத்திற்கும் அதிதேவதை ஆவார். இவர் காற்று, வானம் மற்றும் பூமி, உலகம், பூமியின் இடைவெளிகள் மற்றும் சொர்க்கத்தை ஒளிரச் செய்கிறார்.
பணிகள்
தொகு12 ஆதித்தர்களில் ஒருவர்களான சூரியன் மற்றும் பூஷணைப் போன்று சாவித்திரன் அசையும் மற்றும் நிலையானவற்றின் அதிபதி ஆவர். சாவித்ர் ஒரு கருணையுள்ள தெய்வம். அவர் அனைத்து உயிரினங்களின் பாதுகாவலராக செயல்படுகிறார். இவர் சொர்க்க லோகத்தையும், முன்னோர் உலகத்தையும் பாதுகாக்கிறார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Essence of Inquiry: Vicharasangraham, A Commentary by Nome. Society of Abidance in Truth. 19 January 2019.
- ↑ 2.0 2.1 Bhagavata Purana, Book 6 - Sixth Skandha, Chapter 18
- ↑ Keshavadas, Sadguru Sant (2022-01-19). Gayatri: The Highest Meditation (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-44807-8.
- ↑ Monier-Williams Sanskrit Dictionary (1899), p. 1190.
- ↑ "Rig Veda: Rig-Veda Book 1: HYMN XXXV. Savitar".
- ↑ MacDonell, A.A. (1881). Vedic Mythology. Williams and Norgate.
They are known as 'Fivers' in Islam. The five first Imams or Teachers.
- ↑ Wilson, H. H. (2006). The Vishnu Purana: A System of Hindu Mythology and Tradition. Read Books Publications.
- ↑ Muir, John (1863). Original Sanskrit Texts on the Origin and Progress of the Religion and Institutions of India. Williams and Norgate.