வேதாங்கங்கள்

வேதாங்கங்கள், வேதத்தின் ஆறு உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.

வேதாங்கங்கள் எண்ணிக்கையில் ஆறு வகைப்படும்.

  1. சீக்ஷா – உச்சரிப்பு முறைகளை விளக்குவது
  2. வியாகரணம் – இலக்கணம்
  3. சந்தஸ் – செய்யுள் இலக்கணம்
  4. நிருக்தம் - சொல் இலக்கணம்
  5. ஜோதிடம் – வானசாஸ்திரம்
  6. கல்பம் – செயல்முறை, கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக் கணிதம் ஆகியவை அடங்கியது

இவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பாக, வேதங்களின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதால் இவையனைத்தும் வேதாங்கங்கள் அல்லது ஆறு சாத்திரங்கள் என்பர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாங்கங்கள்&oldid=1911886" இலிருந்து மீள்விக்கப்பட்டது