நிருக்தம்
நிருக்தம் அல்லது சொல் இலக்கணம், (Nirukta) வேதத்தின் நான்காம் வேதாங்கமாகும். நிருக்தம் வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது. நிருக்தம் வேதத்தின் வேர்ச் சொல்லகராதி ஆகும். நிருக்தம் ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்துக் கொடுக்கிறது. வேத மொழியில் உள்ள கடினமான சொற்களுக்கு மூலம் மற்றும் பொருள் தருவதுடன், அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப் பதங்களை விளக்கி, ஏன் குறிப்பிட்ட பொருளில் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.[1][2]