கருட பஞ்சமி

கருட பஞ்டமி என்பது ஆடி அமாவாசையை அடுத்து வருகின்ற பஞ்சமி திதியாகும்.[1] இது காஷ்யபர்- வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாகும். இந்த நாளில் [[திருமால்}திருமாலின்]] வாகனமான கருடனை வணங்குவதும், திருமாலை வணங்குவதும் வைணவர்கள் செய்கின்ற செயலாகும். இந்நாளில் விரதம் இருந்து பூசை செய்தால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் ஆதிசேசனுக்கும் பூசை செய்வது வழக்கமாகும். சாக்தத்தில் கவுரி அம்மனை நாகவடிவில் இன்று வழிபடுகின்றனர்.

தொன்மம்

தொகு

பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும், அவரது மனைவியான கத்ருவுக்கும் நாகர்கள் பிறந்தார்கள். மற்றொரு மனைவியான வினதாவுக்கு அருணன் மற்றும் கருடன் பிறந்தது. ஒரு முறை கத்ருவுக்கும், வினதைக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டியின்படி ஜெயித்தவர்களுக்கு தோற்றவர்கள் அடிமையாக வேண்டும். போட்டியில் வினதா கத்ருவுக்கு அடிமையானாள்.

கத்ரு இந்திரனிடமிருந்து அமர்தக் கலசத்தினைக் கொண்டுவந்தால், கருடனின் தாயுடன், இரு பிள்ளைகளையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடுவதாக கூறினாள். அதனால் மகிழ்ச்சியடைந்து தேவலோகத்திலிருந்து கருடன் அமர்தக் கலசத்தினைப் பெற்றுவந்தான்.

ஆதாரங்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=21368
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருட_பஞ்சமி&oldid=3854752" இலிருந்து மீள்விக்கப்பட்டது