ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்புப் பெறுகின்றது.

அமாவாசை

தொகு

வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரியன் --- சந்திரன்

தொகு

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்

தொகு

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்துக்களின் நம்பிக்கை

தொகு

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோசங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேச்சரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்கள் திருக்கோவிலில் வங்கக் கடலிலும், மாமாங்கத்து அமிர்தகழி தீர்த்தத்திலும், தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்கள் திருக்கோணேச்சரம் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடி_அமாவாசை&oldid=4131696" இலிருந்து மீள்விக்கப்பட்டது