இந்திய தத்துவத்தில் பிரமாணங்கள் (சமசுக்கிருதம்: प्रमाण, Pramāṇas) என்பது "சான்று", "அறிவுக்கான வழிமுறை" ஆகிய நேரடிப் பொருளுடையது.[1][2] பண்டைக் காலத்திலிருந்தே இந்து, பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக இது உள்ளது. இது ஒரு அறிவுக் கோட்பாடு என்பதுடன், மனிதர்கள் துல்லியமானதும் உண்மையானதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்ததும் ஏற்புடையதுமான வழிமுறைகளை இது உள்ளடக்குகின்றது.[2] சரியான அறிவைப் பெற்றுக்கொள்வது எப்படி, எவ்வாறு ஒருவர் அறிகிறார் அல்லது அறியாமல் இருக்கிறார், எந்த அளவுக்கு ஒருவர் அல்லது ஒரு பொருள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவற்றுக்கான விடை காண்பதே பிரமாணத்தின் குறிக்கோள் ஆகும்.[3][4] ஆறு வகையான இத்தகைய வழி முறைகளைப் பற்றி இந்திய தத்துவ நூல்கள் பேசுகின்றன.[5]

ஆறு வழிமுறைகள்

தொகு
 1. புலனுணர்வு - (பிரத்தியட்சம் - perception by the senses)
 2. உய்த்துணர்வு - (அநுமானம் - deduction or inference)
 3. உரைச்சான்று - (சப்தப் பிரமாணம் அல்லது ஆப்தவாக்கியம் - trustworthy testimony or revelation)
 4. ஒப்புநோக்கு - (உபமானம் - analogy or comparison)
 5. சூழ்நிலைசார் உய்த்துணர்வு - (அர்த்தாபத்தி - deduction or inference from circumstances)
 6. எதிர்மறைச் சான்று - (அனுபலப்தி - proof by the negative method)

எல்லாத் தத்துவப் பிரிவுகளுமே இந்த ஆறு முறைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பல தத்துவப் பிரிவுகள் இவற்றுள் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்றன. தத்துவப் பிரிவுகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

புலனுணர்வு

தொகு

புலனுணர்வு அல்லது பிரத்தியட்சம் என்பது நேரடியாகப் புலன்களினால் பார்த்து, கேட்டு, முகர்ந்து, தொட்டு அறிந்துகொள்வதைக் குறிக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
 1. pramANa Sanskrit-English Dictionary, Koeln University, Germany
 2. 2.0 2.1 James Lochtefeld, "Pramana" in The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N-Z, Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8239-2287-1, pages 520-521
 3. Karl Potter (2002), Presuppositions of India's Philosophies, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0779-0, pages 25-26
 4. DPS Bhawuk (2011), Spirituality and Indian Psychology (Editor: Anthony Marsella), Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-8109-7, page 172
 5. அடிப்படையான பிரமாணங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமாணம்&oldid=3913703" இலிருந்து மீள்விக்கப்பட்டது