நேர்ந்து விடுதல்

நேர்ந்து விடுதல் என்பது இந்து சமயத்தின் நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். இந்த நேர்த்திக் கடன் சிறு தெய்வ, பெரு தெய்வ வழிபாடுகளில் வேறுபடுகின்றது. சிறு தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி போன்ற கால்நடைகளை இறைவனுக்கு என்று கூறி வீட்டிலேயே வளர்க்கின்றனர். பின்பு அந்த இறைவனின் திருவிழாவில் அதனை வெட்டி, உண்கின்றனர். பெரு தெய்வ வழிபாடுகளில் கால்நடைகளை கோவில்களில் ஒப்படைத்துவிடுகிறார்கள். அதனை திரும்ப பெருவதோ, வெட்டுவதோ இல்லை. இதே போல சிறு குழந்தைகளைகளையும், மனிதர்களையும் இறைவனுக்காக நேர்ந்து விடும் வழக்கம் முற்காலத்தில் இருந்துவந்துள்ளது.

சிறுதெய்வ வழிபாட்டில் நேர்ந்து விடுதல் தொகு

தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு துன்பம் நேரும் போதும், குடும்ப பிரட்சனைகள் தீரவும் இவ்வாறு கால்நடைகளை நேர்ந்து விடுகின்றனர். இந்து சமயத்தின் சிறு தெய்வ வழிபாட்டில் இந்த நேர்ந்து விடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முனியப்பன், கருப்புசாமி போன்றவற்றிற்காக நேர்ந்துவிடப்பட்டவை அந்தக் கடவுளின் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. இந்த ஆடுகள் நேர்ந்து விட்ட ஆடு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடுகளையோ, கோழிகளையோ திருடிக் கொண்டு சமைத்து உண்பது தெய்வக் குத்தமாக கருதப்படுகிறது. [1]

இறைவனுக்காக வளர்க்கப்படுவதால், மிகுந்த கவனம் கொண்டு வளர்க்கிறார்கள். அக்கால்நடைகளுக்கு நோய் தாக்காமல், வேறு விலங்குகளால் துன்பம் நேராமல் பார்த்துக் கொள்கிறார்கள். கொடை விழா அல்லது ஊர்த் திருவிழா கெடா வெட்டின் போது இறைவனுக்கு இந்தக் கால்நடைகளைப் பலியிடுகின்றனர். கொடை விழா அல்லது ஊர்த் திருவிழா ஏதேனும் காரணங்களால் தடைபட நேர்ந்தால், இந்தக் கால்நடைகள் தொடர்ந்து வளர்க்கப்படுகின்றன. பின் எப்போது திருவிழா நடக்கிறதோ அப்போது வெட்டுகிறார்கள்.

பெருதெய்வ வழிபாட்டில் நேர்ந்து விடுதல் தொகு

பெருதெய்வ வழிபாட்டில் தாங்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க நற்செயல்கள் நிகழ்ந்தால், ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை கோவில்களில் சேர்ப்பிக்கின்றார்கள். இதனை கால்நடை அளித்தல் என்கிறார்கள்.

பண்டையக் காலத்தில் மனிதர்களை இறைவனுக்கு நேர்ந்து விடும் பழக்கமும் இருந்துள்ளது. இறைவனுக்கு நேர்ந்து விடும் பெண்களை தேவரடியாள் என்று வழங்கினர்.[2] [3]

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதரை திருமணம் செய்து கொள்ளும் முறை இருந்துள்ளது. இதற்காக குழந்தை பருவத்திலேயே பெண்களை ஜெகந்நாதருக்கு நேர்ந்து விடுவார்கள். தீர்க்க சுமங்கலிகளாக கருதப்படும் அவர்களே 36 வகை பூசைகளிலும் பங்கேற்கின்றனர். இந்த வழக்கம் 11-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாகும். [4]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. கருப்புக்கு கோபம் வந்தா ஊரு தாங்காதுப்பா... நாச்சிபாளையம் கே.பூபதி - தமிழ் முரசுநாளிதழ்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. பரத்தைக் கூற்று நூல் - சி. சரவணகார்த்திகேயன் முன்னுரை
  3. தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்... வெளி ரங்கராஜன் கீற்று இணைய இதழ்
  4. கடைசி மனைவிகள்-இந்தியாவிலேயே விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயமாகும் அக்டோபர் 13, 2012 தினமணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்ந்து_விடுதல்&oldid=3756724" இலிருந்து மீள்விக்கப்பட்டது