இந்தியாவின் புனித தோப்புகள்

இந்தியாவின் புனித தோப்புகள் (Sacred groves of India) என்பன பல்வேறு அளவுகளில் உள்ள காடுகளின் பகுதிகளாகும். இவற்றை சமூகமே பாதுகாக்கின்றது. பொதுவாக இதைப் பாதுகாக்கின்ற சமூகத்திற்கு ஒரு முக்கியமான சமய நோக்கம் இருக்கின்றது. வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டுதல் கண்டிப்பாக இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.[1] தேன் சேகரிக்க மற்றும் கீழே விழுந்த மரத்தின் பாகங்களைச் சேகரிக்க மட்டுமே அனுமதியுண்டு. சட்டப்படி புனித தோப்புக்கள் இந்தியாவில் பாதுகாக்கப்படுவதில்லை. சில அரசு சாரா அமைப்புகள் உள்ளூர் கிராமத்தினருடன் இணைந்து இந்தத் தோப்புகளைப் பாதுகாக்கின்றனர். பாரம்பரியமாக, சில, இடங்களில் தற்பொழுது வரை, சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் முறை வரும் போது பாதுகாக்கின்றனர்.[2] வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதி வகை சமூக இருப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புனித தோப்புகளை உள்ளடக்கிய சமூகத்தின் நிலங்களுக்கு அரசு பாதுகாப்பை வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புனிதத் தோப்புகளும் அடங்கும்.

இந்தியாவின் மாவ்ப்லாங் புனித தோப்பில் உள்ள பண்டைய ஒற்றைக்கல்
1782இல் ஜேம்ஸ் ஃபோர்ப்ஸ் என்ற கலைஞர் வரைந்த நெர்புடாவின் கரையில் சந்தோட் அருகே உள்ள புனித தோப்பு

இந்தியச் சமூகத் தோப்புகளில் கோயில்கள், மடங்கள் அல்லது கல்லறைகள் இருக்கும். காளிதாசனின் விக்ரமூர்வாசியா என்னும் சங்க கால இலக்கியத்தில் இந்த புனிதத்தோப்புக்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள்

தொகு

பொதுவாக இந்த வனங்கள் ஒரு குறிப்பிட்ட முக்கிய கடவுளை மையமாகக் கொண்டிருக்கும். இந்தப் புனித கடவுள்கள் இந்து கடவுள்கள், இசுலாமிய அல்லது புத்த கடவுள்கள் மற்றும் சிறிய உள்ளூர் சமயங்கள் மற்றும் கிராமியக் கடவுள்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். கேரளம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் மட்டும் சுமார் 1000 கடவுள்கள் இந்தப் புனித தோப்புக்களுடன் சார்ந்திருக்கின்றது. கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் நினைவுக்கு எட்டாத நாள் வரை தற்காப்பு சமூகமான கொடவர்கள் 1000 தேவ காடுகளை, காடுகளின் தெய்வமான ஐயப்பனுக்காகப் பராமரித்து வருகின்றனர்.

இந்து பாரம்பரியத்தின்படி மூன்று வகையான காடுகள் இருப்பதாகக் கருதப்பட்டது. அவை தபோவன், மகாவன் மற்றும் சிரிவன். தபொவன் என்கிற காடுகள் தவத்துடன் தொடர்புடையவை மற்றும் சன்னியாசிகள் மற்றும் ரிசிகள் தான் இங்கு வாழ்கின்றனர். தபோவன் மற்றும் மகாவன் என்பன தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான சரணாலயங்கள் அதனால் சாதாரண மனிதர்கள் அங்கு நுழைவதற்கு அனுமதி இல்லை. இவற்றில் காய்ந்த மரக்கட்டைகள், இலைகள் மற்றும் குறைந்த அளவிலான மரங்கள் வெட்டப்படும், ஆனால் தேவையில்லாமல் இயற்கை சூழ்நிலை சிறிதளவுகூட பாதிக்கப்படுவதில்லை. சிரிவன் என்றால் ”வளங்களின் காடு” என்று அர்த்தம். இவற்றில் அடர்ந்த காடுகள் மற்றும் தோப்புகள் இருக்கும். தோப்புகள் என்பன காடுகளில் அறுவடை செய்ய இருக்கும் இடமாகக் கருதப்படுகிறது.

அமைவிடங்கள்

தொகு

இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 14,000 புனித தோப்புகள் பதிவாகியுள்ளன.அவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு மத்தியில் அரிய விலங்கினங்கள் மற்றும் பெரும்பாலும் அரிய தாவரங்களின் நீர்த்தேக்கங்களாக செயல்படுகின்றன. மொத்த புனித தோப்புகளின் எண்ணிக்கை 100,000 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தோப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் நகரமயமாக்கல் மற்றும் வளங்களை அதிகமாக சுரண்டுதல் ஆகியவை அடங்கும். பல தோப்புகள் இந்து தெய்வங்களின் வசிப்பிடமாக பார்க்கப்பட்டாலும், சமீப காலங்களில் அவற்றில் பல பகுதிகள் கோவில்கள் மற்றும் கோவில்கள் கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.[3][4] புனித தோப்புகள் என்பது இந்து சமயம், பௌத்தம், சைனம் மற்றும் சீக்கியம் போன்ற இந்திய சமயங்கள்|இந்திய சமயங்களில்]] யாத்திரை இடங்கள் ஆகும்.

புனித தோப்புகள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிதறிக் கிடைக்கின்றன. மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பெயர்களில் குறிபிடப்படுகின்றன. பிச்நோயிச்-களால் பராமரிக்கப்படுகின்ற இராசத்தானில் உள்ள குறுங் காடுகளிலிருந்து, கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் வரை புனித தோப்புகள் பல்வேறு இடங்களில் உருவாகின்றன. வடக்கில் உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெற்கில் உள்ள கேரளம் ஆகியவை பெரிய எண்ணிக்கையிலான புனித தோப்புகளுக்கு பெயர் பெற்றவை. கர்நாடகாவிலுள்ள கொடவர்கள் மட்டுமே சுமார் 1000 புனித தோப்புகளை, அப்பகுதியில் பராமரித்து வருகின்றனர்[5]. இராசத்தானில் உள்ள குர்தார் மக்களிடம் ஒரு தனித்துவமான பழக்கமான வேப்பிலை பயிரிட்டு அம்மரத்தை கடவுள் தேவநாராயணன் வாழும் வீடாக வழிபட்டனர். அதனால் குர்த்தார் வாழும் வாழிடம் மனிதர்கள் வாழும் புனித தோப்பாக காட்சியளித்தது[6] இதேபோல் தில்லியின் கடைசியாக எஞ்சியிருக்கும் இயற்கை காடான மாங்கர் பானி, அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் குர்ஜார்களால் பாதுகாக்கப்படுகிறது. [7].

மாநிலங்கள் தோப்புகளின் எண்ணிக்கை உள்ளூர் பெயர் மேற்கோள்கள்
ஆந்திரப் பிரதேசம் 691 பவித்ராசேத்ராலு கைலாச் சி.மல்கோத்ரா.[8]
அருணாச்சலப் பிரதேசம் 65 கும்பா காடுகள்
(மடங்களுடன்
இணைக்கப்பட்டிருப்பதால் )
தூத்லே.[9]
அசாம் 40 தான், மடைகோ
சத்தீசுகர் 600* சர்னா, தேவ்லா, மந்தர், புத்ததேவ்
கோவா பதிவு இல்லை* SEBRC ஆவணம் [10]
குசராத் 29*
அரியானா 248 பீட் அல்லது பிட், பனி, பான், சங்லத், சம்லத்.
இமாச்சலப் பிரதேசம் 5000 தியோ பூமி
சார்க்கண்ட் 21* சர்னா மரைன் கரின் [11]
கர்நாடகம் 1424 தேவரகாடு, தேவ்காடு காட்கில்.[12]
கேரளம் 2000 காவு, சர்பகாவு எம். செயராசன் [13]
மகாராட்டிரம் 1600 தியோராய்/தேவ்ராய் வாக்சவுரி.[14]
மணிப்பூர் 365 காம்காப், மௌயாக் '
(பாதுகாக்கப்பட்ட புனித மூங்கில்கள்)
Khumbongyam et al.[15]
மேகாலயா 79 லா கின்டங்,
லா லிண்டோ
உபத்யே.[16]
ஒடிசா 322* 'சகிரா, தகுரம்மா
புதுச்சேரி 108 கோவில் காடு இராமானுசம்.[17]
இராசத்தான் 9* ஒரன், கென்கிரி, வாணி, சம்லெத் தே, தேவ்பாணி, சோக்மாயா
சிக்கிம் 56 கும்பா காடுகள் எச்.எச். தாசு [18]

தூத்லே.[9]

தமிழ்நாடு 503 கோவில் காடு எம். அமிர்தலிங்கம் [19]
தெலுங்கானா 65 கைலாசு சி. மல்கோத்ரா.[8]
உத்தரகாண்ட் 18* தேவ்பூமி, புக்யால் அந்த்வால்.[20]
மேற்கு வங்காளம் 670* கரம்தன், அரிதன், சகீரா, சபிதீர்தன்,சந்தல்புரிதன் ஆர். கே. பகத் [21]

இங்கு குறிப்பிட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்தின் சி,பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் பதிவுகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

சர்ப்ப காவு

தொகு
 
மன்னன் புரத் காவு, நீலேசுவரம்

ஒரு சர்ப்ப காவு அல்லது பாம்பு தோப்பு என்பது கேரளத்தில் இருக்கும் ஒரு புனித தோப்பு ஆகும். காவு என்பது பாரம்பரியமாக தெனிந்தியாவின் கேரளத்தில் உள்ள மலபார் கடற்கறை அருகில் உள்ள புனித தோப்புகளுக்கு தரப்பட்ட பெயர் ஆகும்[22]. இக்காவுகளில் தேய்யம் என்ற நூற்றாண்டு பழமையான பாரம்பரிய நடனத்திற்கு பெயர் பெற்றவை.

பயன்கள்

தொகு

பாரம்பரிய பயன்கள்

தொகு

ஆயுர்வேத மருந்துகளின் மூல இடமாக விளங்கியதுதான் இதன் முக்கிய பாரம்பரிய பயன் ஆகும். பழங்கள் மற்றும் தேன் கிடைக்கும் முக்கிய இடங்களாகவும் இருந்தது. எனினும் இப்புனித தோப்புகளில் வேட்டையாடுவதோ மரம் வேட்டுவதோ தவறு என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது. இந்த பசுமையான பரப்பு மண் அரிப்பை தடுக்க உதவியது மற்றும் இராசத்தானைப் போல பாலைவனமாதலை தடுத்தது. இத்தோப்புகள் குளம் மற்றும் சிற்றோடைகளுடம் தொடர்பு இருந்ததால் உள்ளூர் சமூகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்தது.

நவீன பயன்கள்

தொகு

நவீன காலத்தில் புனித தோப்புகள் பல்லுயிர் மையப்புள்ளியாக விளங்குகின்றன, ஏனென்றால் பல வகையான இனங்கள், வாழ்விட அழிப்பு மற்றும் வேட்டையாடுதலால் இப்பகுதிகளில் தஞ்சமடைகின்றன. பொதுவாகவே அருகில் உள்ள பகுதிகளில் அழிந்த தாவரம் மற்றும் விலங்கு இனங்கள் இப்புனித தோப்புகளில் இருக்கும்.

அச்சுறுத்தல்

தொகு

நகரமயமாதல், வளங்களை மிக அதிகமாக சுரண்டுதல் மற்றும் சமய பழக்கங்களால் தோப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. கோயில்கள் மற்றும் வழிபாடு தளங்கள் கட்டமைப்பிற்காக சமீப காலமாக இப்புனித தோப்புகள் அழிக்கப்படுகினறன.

மேற்கோள்கள்

தொகு
  1. Gadgil, M. and Vartak, V.D. ; Sacred groves of India : A plea for continued conservation Journal of Bombay Natural History Society, 72 : 314-320, 1975
  2. "Community Forest Management and Joint Forest Management; An Ecological, Economic and Institutional Assessment in Western Ghats, India" (PDF). 2007-06-10. Archived from the original (PDF) on 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2018-08-07.
  3. Malhotra, K. C., Ghokhale, Y., Chatterjee, S. and Srivastava, S., Cultural and Ecological Dimensions of Sacred Groves in India, INSA, New Delhi, 2001
  4. Ramachandra Guha, The Unquiet Woods, University of California Press, 2000 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520222359)
  5. A series பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம் of articles in the journal Down to Earth on sacred groves
  6. http://www.infinityfoundation.com/mandala/t_es/t_es_pande_forest.htm
  7. http://www.ngtba.org/index.php/news?start=190<
  8. 8.0 8.1 Kailash C. Malhotra, Yogesh Gokhale, Sudipto Chatterjee, and Sanjeev Srivastava (2001). Cultural and Ecological Dimensions of Sacred Groves in India. Indian National Science Academy, New Delhi, and Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya, Bhopal. [1] பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம்
  9. 9.0 9.1 Ed. N. Dudley, L. Higgins-Zogib, and S. Mansourian; The Arguments for Protection Series - Beyond Belief: Linking faiths and protected areas to support biodiversity conservation, pp. 91-95; World Wide Fund for Nature, 2005 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88085-270-6)
  10. Website பரணிடப்பட்டது 2004-05-30 at the வந்தவழி இயந்திரம் of the Sacred Grove Restoration Project, Society for Ecological Restoration
  11. Marine Carrin, Santal autonomy as a social ecology[தொடர்பிழந்த இணைப்பு], 16th European Conference on Modern South Asian Studies, Edinburgh, 2000
  12. Gadgil, M., D. Subash Chandran, Sacred Groves and Sacred Trees of Uttara Kannada, Lifestyle and Ecology, edited by Baidyanath Saraswati. New Delhi: Indira Gandhi National Centre for the Arts 1998
  13. M. Jayarajan, Sacred Groves of North Malabar பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம், Kerala Research Programme on Local Level Development, Centre for Development Studies, Thiruvananthapuram (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87621-95-8)
  14. Waghchaure, Chandrakant K.; Tetali, Pundarikakshudu; Gunale, Venkat R.; Antia, Noshir H.; Birdi, Tannaz J., Sacred Groves of Parinche Valley of Pune District of Maharashtra, India and their Importance[தொடர்பிழந்த இணைப்பு], Anthropology & Medicine, Volume 13, Number 1, April 2006, pp. 55-76(22)
  15. Khumbongmayum, M.D., Khan, M.L., and Tripath, R.S, Sacred groves of Manipur – ideal centres for biodiversity conservation, Current Science, Vol 87, No 4, 25 Aug 2004
  16. Upadhaya, K.; Pandey, H.N. 2; Law, P.S.; Tripathi, R.S; Tree diversity in sacred groves of the Jaintia hills in Meghalaya, northeast India[தொடர்பிழந்த இணைப்பு], Biodiversity and Conservation, Volume 12, Number 3, March 2003, pp. 583-597(15)
  17. M.P. Ramanujam and K. Praveen Kumar Cyril, Woody species diversity of four sacred groves in the Pondicherry region of South India[தொடர்பிழந்த இணைப்பு], Biomedical and Life Sciences and Earth and Environmental Science, Volume 12, Number 2 / February, 2003, Springer Netherlands
  18. S. S. Dash, Kabi sacred grove of North Sikkim Current Science, Vol 89, No 3, 10 Aug 2005
  19. M. Amirthalingam, Sacred Groves of Tamil Nadu – A Survey, CPR Environmental Education Centre, Chennai, India, p. 191, 1998
  20. Ashish Anthwal, Ramesh C. Sharma, and Archana Sharma, Sacred Groves: Traditional Way of Conserving Plant Diversity in Garhwal Himalaya, Uttaranchal பரணிடப்பட்டது 2007-07-06 at the வந்தவழி இயந்திரம், The Journal of American Science, 2(2), 2006, Anthwal et al., Sacred Groves: Conserving Plant Diversity
  21. Ram Kumar Bhakat, Socio-religious and ecological perspective of a sacred grove from Midnapore district, West Bengal, Science and Culture (Sci. Cult.), 2003, vol. 69, no 11-12, pp. 371-374
  22. M. Jayarajan, Sacred Groves of North Malabar பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம், Kerala Research Programme on Local Level Development, Centre for Development Studies, Thiruvananthapuram (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87621-95-8)

மேலும் படிக்க

தொகு