சத்தீசுகர்

இந்திய மாநிலம்

சத்தீஸ்கர் (Chhattisgarh) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள்.

—  சத்தீஸ்கர் மாநிலம்  —
ராய்ப்பூர், சத்தீஸ்கர்
இந்தியாவில் சத்தீஸ்க்கரின் அமைவிடம்
அமைவிடம் 21°16′N 81°36′E / 21.27°N 81.60°E / 21.27; 81.60ஆள்கூறுகள்: 21°16′N 81°36′E / 21.27°N 81.60°E / 21.27; 81.60
மாவட்டங்கள் 18
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 2000
தலைநகரம் ராய்ப்பூர், சத்தீஸ்கர்
மிகப்பெரிய நகரம் ராய்ப்பூர்
ஆளுநர் அனுசுயா யுகே
முதலமைச்சர் பூபேஷ் பாகல்
ஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (90)
மக்கள் தொகை 2,55,40,196 (17வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.516 (medium
கல்வியறிவு 70.28% (23வது)
மொழிகள் இந்தி, சத்தீஸ்கரி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
இணையதளம் chhattisgarh.nic.in


சத்தீஸ்கர் மாநிலத்தின் 28 மாவட்டங்களின் வரைபடம்

வரலாறுதொகு

பண்டைக்கால மற்றும் இடைக்கால வரலாறுதொகு

பண்டைய காலங்களில், இந்த பகுதியில் தட்சிண கோசலம் (தென் கோசலை) என அறியப்பட்டது. மேலும் இப்பகுதி மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இப்பகுதியில் ஷரப்புரியர், பாண்டுவன்சி, சோமவன்சி, கலாச்சூரி, நாகவன்சி போன்ற ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 11 ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் மீது சோழப் பேரரசின் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் படையெடுத்தனர்.[1][2][3]

காலனிய மற்றும் விடுதலைக்குப் பிந்தைய காலம்தொகு

சத்தீஸ்கர் மராத்தா ஆட்சியாளரின்கீழ் (நாக்பூர் பான்லே) கி.பி. 1741 முதல் 1845 வரை இருந்தது. பின்னர் 1845 முதல் 1947 வரை பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் மத்திய மாகாணத்தின் சத்தீஸ்கர் பிரிவாக இருந்தது. 1905 ஆம் ஆண்டில், சம்பல்பூர் மாவட்டம் ஒடிசாவுடன் இணைக்கப்பட்டது மேலும் சுர்குஜா பாளையம் வங்கத்திடமிருந்து சட்டீஸ்கருக்கு மாற்றப்பட்டது.

இந்தப் பகுதி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 1 நவம்பர் 1956 அன்று புதிய மாநிலத்துடன் இணைக்கப்பட்டது, இதன்பிறகு ஒரு மாநிலத்தின் பகுதியாக 44 ஆண்டுகள் இருந்தது. இப்பகுதி மத்தியப் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆவதற்கு முன்னர், நாக்பூரைத் தலைநகராக கொண்ட, பழைய மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியின்கீழ் மத்திய மாகாணம் மற்றும் பெராரின் (மமா மற்றும் பெரார்) பகுதியாக இருந்தது. சத்தீஸ்கர் அரசு சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சில சுதேச அரசுகளும் இருந்தன, ஆனால் பின்னர் அவை மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன.[4]

சத்தீஸ்கர் பிரிப்புதொகு

தற்போதைய சத்தீஸ்கர் மாநிலம் 2000 நவம்பர் அன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது,[5][6] என்றாலும் தனி மாநிலக் கோரிக்கை 1920களிலேயே எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது என்றாலும், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் தொடங்கப்பட்டாமல் இருந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூடி மனுக்கள் அளிப்பது, பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள், வேலை நிறுத்தங்கள் போன்றவை நடத்தப்பட்டன.[7] தனி சத்தீஸ்கர் ஒரு தேவை குறித்து 1924 இல் ராய்ப்பூர் காங்கிரஸ் அலகு மூலம் எழுப்பப்பட்டது. மேலும் திரிபுராவில் நடந்த இந்திய காங்கிரஸின் வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் சத்தீஸ்கர் பிராந்திய காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1954 ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்ட போது, தனி சத்தீஸ்கர் மாநிலத்தின் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது, ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு, தனி மாநில கோரிக்கை நாக்பூரில் உள்ள மத்திய பாரதத்தின் மாநில சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.[7]

1990களில் புதிய மாநிலத்தின் தேவைக்கான செயல்பாடுகள் அதிகரித்தன, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அரசியல் அமைப்புகள் உருவாக்கம் பெற்றன. குறிப்பாக சத்தீஸ்கர் ராஜ்ஜிய நிர்மாண் மன்ச் நிறுவப்பட்டது. சந்துலால் சந்திரகர் என்பவர் கோரிக்கைக்கான இயக்கத்துக்கு தலைமை வகித்தார் இந்த இயக்கத்தின் தலைமையில், பல வெற்றிகரமான பிராந்தியம் தழுவிய வேலை நிறுத்தங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. இதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவும் இருந்தது,[7]

தில்லியில் புதியதாக பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தால், மத்தியப் பிரதேச சட்டசபை ஒப்புதலுக்கான தனி சத்தீஸ்கர் மாநில மசோதா அனுப்பப்பட்டது. அங்கு அது மீண்டும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கரில் தனி மாநிலம் உருவாக்க வழி வகுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய சனாதிபதி ஆகஸ்ட் 2000 26 இல் மத்தியப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2000 க்கு தனது ஒப்புதலை வழங்கினார். 2000 நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவானது,[7]

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,545,198 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,832,895 மற்றும் பெண்கள் 12,712,303 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 991 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,661,689 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.27% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.24% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.11% ஆக உள்ளது.[8]

சமயம்தொகு

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 23,819,789 (93.25%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 514,998 (2.02 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 490,542 (1.92 %) ஆகவும், பௌத்த சமயத்தவர்களின் மக்கள் தொகை 70,467 (0.28 %) ஆகவும், சமண சமயத்தவரின் மக்கள் தொகை 61,510 (0.24 %), சீக்கிய சமய மக்கள்தொகை 70,036 (0.27 %) ஆகவும் 61,510 0.24 % சமயம் குறிப்பிடாதவர்கள் 23,262 (0.09 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 494,594 (1.94 %) ஆக உள்ளனர்.

புவியியல்தொகு

அரசியல்தொகு

பொருளாதாரம்தொகு

சத்தீஸ்கர் மாநிலத்தின் 2010-ஆம் வருடத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 60,079 கோடி ரூபாய் ஆகும். 2009 - 2010 ஆம் ஆண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 11.49% உயர்ந்தற்கு [9] வேளாண்மைத் தொழிலும், தொழில் வளர்ச்சியுமே முக்கிய காரணிகள் ஆகும்.

வேளாண்மைதொகு

வேளாண்மைத் தொழில் மாநிலத்தின் 4.828 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.[10][11] மாநிலத்தின் 80% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த சிறு தொழிலையே நம்பியுள்ளனர்.

நெல், நவதாணியங்கள், எண்ணெய் வித்துக்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்கள் ஆகும்.

மாநிலத்தின் மொத்த பரப்பில் 41.33% பகுதிகள் வளமிக்க காட்டுப் பகுதிகள் கொண்டது.

தொழில் துறைதொகு

இரும்பு ஆலைகள், மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், அலுமினியம், இரும்பு, சுண்ணாம்பு, தோலமைட், பாக்சைட், படிகக்கற்கள், பளிங்கு கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் 20% சத்தீஸ்கர் மாநிலம் கொண்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள்தொகு

தொடருந்துதொகு

ராய்ப்பூர் தொடருந்து நிலையம் மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இருப்புப்பாதையால் இணைக்கிறது.[12]

விமான நிலையம்தொகு

ராய்ப்பூர் விமான நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களை வானூர்தி மூலம் இணைக்கிறது.[13][14]

நெடுஞ்சாலைகள்தொகு

தேசிய நெடுஞ்சாலைகள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதிகளையும் மற்றும் மாநிலங்களையும் தரை வழியாக இணைக்கிறது.[15]

சுற்றுலாதொகு

நிர்வாகம்தொகு

சத்தீஸ்கர் மாநிலம் நிர்வாக வசதிக்காக 5 கோட்டங்களாகவும், 33 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

 1. பஸ்தர்
 2. பிஜப்பூர்
 3. பிலாஸ்பூர்
 4. தந்தேவாடா
 5. தம்தரி
 6. துர்க்
 7. ஜஷ்பூர்
 8. கவர்தா
 9. காங்கேர்
 10. கோர்பா
 11. கோரியா
 12. மகாசமுந்து
 13. நாராயண்பூர்
 14. ராய்ப்பூர்
 15. ராய்கர்
 16. ராஜ்நாந்துகாவ்
 17. சர்குஜா
 18. பலோடா பஜார்
 19. சுக்மா
 20. கொண்டகவான்
 21. சூரஜ்பூர்
 22. முங்கேலி
 23. பலோட்
 24. பலராம்பூர்
 25. பெமேதரா
 26. கரியாபந்து
 27. ஜாஞ்சுகீர்
 28. கபீர்தாம்
 29. சக்தி மாவட்டம்
 30. மோலா மன்பூர் மாவட்டம்
 31. சரங்கர்-பிலைகர் மாவட்டம்
 32. மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
 33. கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம்

மேற்கோள்கள்தொகு

 1. Dimensions of Human Cultures in Central India by Professor S.K. Tiwari p.161
 2. Dimensions of Human Cultures in Central India: by Professor S.K. Tiwari p.163
 3. Tribal Roots of Hinduism by Shiv Kumar Tiwari p.209
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-05-02 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-03-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cgfinance.nic.in என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; zeenews.india.com என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. 7.0 7.1 7.2 7.3 "Prithak Chhattisgarh". 4 July 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 July 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 8. http://www.census2011.co.in/census/state/chhattisgarh.html
 9. "Chhattisgarh's GDP growth highest in 2009–10". http://www.business-standard.com/india/news/chhattisgarh%5Cs-gdp-growth-highest-in-2009-10/406295/. பார்த்த நாள்: 22 July 2011. 
 10. "Agriculture in Chhattisgarh". 21 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 July 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
 11. "Economy of Chhatisgarh". 22 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
 12. http://indiarailinfo.com/departures/raipur-junction-r/185
 13. https://www.makemytrip.com/flights/raipur-flight-tickets.html
 14. http://timesofindia.indiatimes.com/City/Raipur/Raipur-airport-to-go-international-soon/articleshow/38504003.cms
 15. National Highways in Chhattisgarh, Road Map

வெளி இணைப்புகள்தொகு

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்&oldid=3430645" இருந்து மீள்விக்கப்பட்டது