துர்க் மாவட்டம்
சட்டீஸ்கரில் உள்ள மாவட்டம்
துர்க் மாவட்டம், இந்திய மாநிலமான சட்டீஸ்கரில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் துர்க் நகரில் அமைந்துள்ளது. இது 8,537 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது சட்டீஸ்கர் மாநிலத்தில் அதிக மக்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. [1] இங்குள்ள பிலாய் நகரில் பிலாய் உருக்கு ஆலை அமைந்துள்ளது.
துர்க் மாவட்டம் दुर्ग जिला | |
---|---|
![]() துர்க்மாவட்டத்தின் இடஅமைவு சட்டீஸ்கர் | |
மாநிலம் | சட்டீஸ்கர், இந்தியா |
தலைமையகம் | துர்க் |
பரப்பு | 8,535 km2 (3,295 sq mi) |
மக்கட்தொகை | 3343872 (2011) |
படிப்பறிவு | 75.62 % |
பாலின விகிதம் | 982 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் தொகை தொகு
2011 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட போது, 3,343,079 மக்கள் வாழ்ந்தனர். [1] சராசரியாக சதுரகிலோமீட்டருக்குள் 391 பேர் வாழ்கின்றனர். [1] ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் இருந்தது. [1] இங்கு வாழ்ந்தோரில் 79.69% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். [1]
சான்றுகள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.