பாலோட் மாவட்டம்
பாலோட் மாவட்டம் (Balod district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். துர்க் கோட்டத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் பாலோட் ஆகும். பாலோட் நகரம், தம்தரிலிருந்து நாற்பத்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும், துர்க்கிலிருந்து ஐம்பத்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 101 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
பலோட் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோட் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
கோட்டம் | துர்க் |
தலைமையிடம் | பாலோட் |
பரப்பளவு | |
• Total | 3,527 km2 (1,362 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• Total | 8,26,165 |
• அடர்த்தி | 230/km2 (610/sq mi) |
Demographics | |
• பாலின விகிதம் | 1022 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | balod |
1 சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[2]
மாவட்ட எல்லைகள்
தொகுஇம்மாவட்டத்தின் கிழக்கே தம்தரி மாவட்டம், மேற்கே ராஜ்நாந்துகாவ் மாவட்டம், வடக்கே துர்க் மாவட்டம் மற்றும் தெற்கே காங்கேர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
அரசியல்
தொகுஇம்மாவட்டம் சஞ்ஜாரி பாலோட் சட்டமன்ற தொகுதி, தௌண்டி லோகரா சட்டமன்ற தொகுதி மற்றும் குந்தேர்தேகி சட்டமன்ற தொகுதி என மூன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது.
இம்மாவட்டம் காங்கேர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது.
நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் பாலோட் உட்கோட்டம் மற்றும் குரூர் உட்கோட்டம் , தௌண்டி லொகரா உட்கோட்டம் என மூன்று உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாலோட், குரூர், குந்தர்தேகி, தௌண்டி லொகரா மற்றும் தௌண்டி என ஐந்து வருவாய் வட்டங்களை கொண்டது.
பாலோட் மற்றும் தல்லி ராஜ்கரா நகராட்சி மன்றங்களும், ஆறு நகரப் பஞ்சாயத்துக்களும்,
நிலப்பரப்பு
தொகு3,52,700 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட பாலோடு மாவட்டம், காட்டுப் பரப்பு 74,911 ஹெக்டர் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
தொகுசெழிப்பான காடுகள், கனிம வளங்கள் மூலம் மாவட்ட வருவாயில் 78% கிடைக்கிறது. நெல், தானியங்கள், கரும்பு, கோதுமை பயிரிடப்படுவதால், வேளாண் தொழில்கள் இம்மாவட்டத்தில் பெருகியுள்ளது. தந்துலா நீர்த்தேக்கம், கார்காரா நீர்த்தேக்கம் மற்றும் கோண்டிலி நீர்த்தேக்கம் வேளாண்மை நீர் பாசானத்திற்கு உதவுகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,26,165 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,08,638 மற்றும் பெண்கள் 4,17,527 ஆகவும் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 2,59,043 ஆகவும், பட்டியல் சமூகத்தினரின் மக்கள்தொகை 68,431 ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1022 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 234 பேர் வீதம் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook: Durg" (PDF). censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
- ↑ "Chhattisgarh gets New Year gift - 9 new districts!".