ராஜ்நாந்துகாவ் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்



ராஜ்நாந்துகாவ் மாவட்டம் மாவட்டம்
राजनांदगांव जिला
ராஜ்நாந்துகாவ் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்துர்க்
தலைமையகம்ராஜ்நாந்துகாவ்
பரப்பு8,022.55 km2 (3,097.52 sq mi)
மக்கட்தொகை1,537,133 (2011)
நகர்ப்புற மக்கட்தொகை231,647
படிப்பறிவு77.2%
பாலின விகிதம்1023
வட்டங்கள்9
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
சராசரி ஆண்டு மழைபொழிவு1274 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ராஜ்நாந்துகாவ் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ராஜ்நாந்துகாவ் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் 26 சனவரி 1973 அன்று துர்க் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு நிறுவப்பட்டது. 1 சூலை 1998 அன்று இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு கபீர்தாம் மாவட்டம் நிறுவப்பட்டது. 10 செப்டம்பர் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொன்டு கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம் நிறுவப்பட்டது.

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]

மாவட்ட நிர்வாகம்

தொகு

8022.55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 1,537,133. இம்மாவட்டம் 4 ஊராட்சி ஒன்றியங்களையும், 1648 கிராமங்களையும், 8 நகராட்சிகளையும், 41 காவல் நிலையங்களையும், 49 கல்லூரிகளையும், 6 மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது.

போக்குவரத்து

தொகு

மும்பை-ஹவுரா செல்லும் தொடருந்துகள் ராஜ்நாந்துகாவ் தொடருந்து வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

தொகு

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,537,133 ஆகும். அதில் ஆண்கள் 762,855 மற்றும் பெண்கள் 774,278 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.96% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,56,623 மற்றும் 4,05,194 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.06%, இசுலாமியர் 1.54%, பௌத்தர்கள் 1.86%, சமணர்கள் 0.53%, சீக்கியர்கள் 0.24%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 4.44% ஆகவுள்ளனர்.[5]

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  5. Rajnandgaon District Population, Caste, Religion Data (Chhattisgarh) - Census 2011

இணைப்புகள்

தொகு