சிவப்பு தாழ்வாரம்

சிவப்பு தாழ்வாரம் (Red Corridor) என்பது இந்தியாவில் குறிப்பாக பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் பகுதிகளை சிவப்பு தாழ்வாரம் எனப்படுகிறது.[1][2][3]

(இடது) 2007-இல் நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள். (வலது) 2013-இல் நக்சலைட்டு - மாவோயிஸ்டு பாதிக்கப்பட்ட பகுதிகள்.

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மாநிலத்திலும், சுரங்கத் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட ஜார்கண்ட், மாநிலத்திலும், வேளாண் கூலித் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அரசுக்கு எதிரான நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளின் நடவடிக்கைகள் அதிகம் உள்ளது.

இப்பகுதிகளில் நிலவும் ஏழ்மை, கல்லாமை, அறியாமை, சுரண்டல், தீண்டாமை போன்ற காரணங்களால் அப்பாவி மக்கள் நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளால் எளிதில் வயப்படுகின்றனர்.[2][3][4]

அரசுக்கு எதிரான அனைத்து வகையான நக்சலைட்டு அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என இந்திய அரசின் சட்டங்கள் விளக்குகிறது.[5][6][7][8] சூலை 2011 ஆண்டில் வெளியிட்ட இந்திய அரசின் அறிவிக்கையின் படி, இந்தியாவின் 83 மாவட்டங்கள் சிவப்பு தாழ்வாரமாக, அதாவது நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு போராளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[9][10]

4 ஏப்ரல் 2021 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம், பிஜப்பூர் மாவட்டம் மற்றும் தந்தேவாடா மாவட்டங்களின் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்புப் படைப்படைகளின் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபட்ட போது, சுக்மா மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு நடைபெற்ற சன்டையில் 22 பாதுகாப்புப் படைவீரர்களும், 9 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.[11][12]இதில் ஒரு பாதுகாப்புப் படைவீரரை மாவோயிஸ்டுகள் பிடித்துக் கொண்டனர். 8 ஏப்ரல் 2021 அன்று மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்த படைவீரரை திரும்ப ஒப்படைந்தது. [13]

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்தொகு

நக்சலைட்டு- மாவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்டுள்ள எழுபத்து எட்டு இந்திய மாவட்டங்களின் விவரம்;[9][10]

மாநிலங்கள் மொத்த மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்[14]
ஆந்திரப் பிரதேசம் 13 8 குண்டூர், பிரகாசம், அனந்தபூர், கர்நூல், விஜயநகரம், கிழக்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம்
பிகார் 38 11 அவுரங்காபாத், கயா, ரோத்தாஸ், போஜ்பூர், கைமுர், கிழக்கு சம்பாரண், சம்பாரண், சீதாமரி, முங்கேர், நவாதா, ஜமூய் மாவட்டம்
ஜார்கண்ட் 24 18 ஹசாரிபாக், லோஹர்தக்கா, பலாமூ, சத்ரா, கார்வா, ராஞ்சி, கும்லா, சிம்டேகா, லத்தேகர், கிரீடிக், கோடர்மா, போகாரோ, தன்பத், கிழக்கு சிங்பூம், மேற்கு சிங்பூம், சராய்கேலா, குந்தி, ராம்கர்
சத்தீஸ்கர் 27 10 பஸ்தர், பிஜப்பூர், தந்தேவாடா, ராஜ்நாந்துகாவ், சுக்மா, நாராயண்பூர், சர்குஜா, கோரியா, ஜஷ்பூர், காங்கேர் மாவட்டம்[15]
மகாராஷ்டிரம் 35 3 கட்சிரோலி, சந்திரப்பூர், கோந்தியா
ஒடிசா 30 9 மால்கான்கிரி, கஞ்சாம், கோராபுட், கஜபதி, ராயகடா, மயூர்பஞ்சு, சுந்தர்கட், தேபகட், கந்தமாள்
தெலங்கானா 10 8 ஆதிலாபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத் மற்றும் வாரங்கல்
உத்தரப் பிரதேசம் 75 3 சோன்பத்ரா மாவட்டம், மிர்சாபூர், சந்தௌலி
மேற்கு வங்காளம் 19 3 பாங்குரா, மேற்கு மிட்னாப்பூர், புருலியா
மத்தியப் பிரதேசம் 50 1 பாலாகாட்
மொத்தம் 318 78

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Rising Maoists Insurgency in India". Global Politician. 2007-05-13. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
 5. "::Ministry of Home Affairs::". 2012-05-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-10 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Maoist Communist Centre - Left Wing Extremism, India, South Asia Terrorism Portal". 1 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
 7. "People's War Group - Left Wing Extremism, India, South Asia Terrorism Portal". 1 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
 8. Sukanya Banerjee, "Mercury Rising: India’s Looming Red Corridor", Center for Strategic and International Studies, 2008.
 9. 9.0 9.1 "Centre to declare more districts Naxal-hit". 7 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
 10. 10.0 10.1 "The Union Government of India to Bring 20 More Districts in the Naxal-hit states". 1 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
 11. "சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்... வீரர்கள் பலி 22 ஆக உயர்வு". 2021-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-04-04 அன்று பார்க்கப்பட்டது.
 12. சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் திட்டமிட்டு கொல்லப்பட்டது எப்படி?
 13. சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்
 14. "83 districts under the Security Related Expenditure Scheme". IntelliBriefs. 2009-12-11. 2011-10-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-17 அன்று பார்க்கப்பட்டது.
 15. Sukma Naxal Attack: 25 CRPF Men Killed By Maoists In Chhattisgarh
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_தாழ்வாரம்&oldid=3669187" இருந்து மீள்விக்கப்பட்டது