போகாரோ மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
போகோரா மாவட்டம் இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ளது. இதன் தலைமையகம் போகாரோ ஸ்டீல் சிட்டியில் உள்ளது. இந்த மாவட்டத்தில் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள உருக்காலை, ஆசியாவிலேயே பெரியது. இங்கு இந்திய உருக்கு ஆணையம், இந்தியா நிலக்கரி நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஆகியவற்றின் கிளைகள் அமைந்துள்ளன. இது 2883 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
போகாரோ மாவட்டம் {{{Local}}} | |
---|---|
![]() போகாரோமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்டு | |
மாநிலம் | ஜார்க்கண்டு, இந்தியா |
தலைமையகம் | போகாரோ ஸ்டீல் சிட்டி |
பரப்பு | 2,883 km2 (1,113 sq mi) |
மக்கட்தொகை | 20,62,330 |
மக்கள்தொகை அடர்த்தி | 715/km2 (1,850/sq mi) |
படிப்பறிவு | 73.48 % |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | 1. தன்பாத் (தன்பாத் மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது), 2. கிரிடீ (கிரிடீ மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 2,062,330 மக்கள் வாழ்கின்றனர்.[1] சதுர கிலோமீட்டருக்குள் 716 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[1] ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்வோரில் 73.48% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மாவட்டக் கணக்கெடுப்பு 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
இணைப்புகள்
தொகு- மாவட்ட அரசு பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம்
- போகோராவில் உள்ள இடங்கள்